17,000 ரன்களைக் கடந்து சச்சின் சாதனை

 
 17,000 ரன்களைக் கடந்து சச்சின் சாதனை

ஹைதராபாத், நவ.5 (டிஎன்எஸ்)

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச ஒருநாள் போட்டியில் 17 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல உலக சாதனைகளைப் புரிந்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனை வரலாற்றில் இன்று மேலும் ஒரு சாதனை மகுடம் சூட்டப்பட்டது.

ஹைதராபாத்தில் இன்று நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் 17 பந்துகளை சந்தித்து 9 ரன்கள் எடுத்த போது 17 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற இச்சாதனையைப் புரிந்தார் சச்சின்.

சச்சின் டெண்டுல்கர், 1989ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி குஜ்ரன்வாலாவில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

இதுவரை 435 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர், 45 சதம் மற்றும் 91 அரை சதம் எடுத்து 17 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் எடுத்துள்ளார்.

இதேபோல் டெஸ்ட் போட்டி வரலாற்றில் அவர், 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 42 சதம் மற்றும் 53 அரைசதம் எடுத்து 12,773 ரன்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்னாக ஆட்டமிழக்காமல் 248 ரன்கள் எடுத்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்து இந்தியாவிற்கு மேலும் பல பெருமைகளைச் சேர்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

(டிஎன்எஸ்)

Nov 05, 2009

Worth a Click

Comments


LM
Valthukkal Sachin valthukkal..... we need many more records......
06 Nov 2009 12:20 AM




Security Code


 
* Do not use semicolon(;)
மேலும் விளையாட்டு செய்திகள்

Your web to you - brought to you by chennaionline
Movies - Jobs - Events - Videos - News - Blogs - Info all in one place

உங்கள் வாக்கு

மெரினாவில் கிரிக்கெட்?
சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது சரியா?


30 ஆயிரம் ஓட்டங்கள்: சச்சினை வாழ்த்துங்கள்

Worth a Click

Daily Predictions

MITHUNA MITHUNA : Today be conservative in your planning process. But be dynamic and encourag...More
 Cartoon Craze

with the fast pace life of parents and vanishing joint family setup....More

Most Commented
04:52 AM IST
24 hours    |    1 week    |    1 month     
© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.