சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து நவம்பர் 16ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வீடியோ கான்பரன்சிங் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மாவட்ட ஆட்சியருடன் இன்று ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால் வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மறைவையொட்டி அந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.
இதனால் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.பிரகாஷ், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா வரும் 16ஆம் தேதி மாலை 3 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)