சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
எரிவாயு விநியோகத்தில் ஏற்படுகின்ற சேவைக்குறைபாடுகள் குறித்து நுகர்வோர் புகார் தெரிவித்து நிவாரணம் பெற ஏதுவாக நவம்பர் 9ஆம் தேதி குறைதீர்ப்பு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
எரிவாயு விநியோகத்தில் ஏற்படுகின்ற சேவைக்குறைபாடுகள் குறித்து நுகர்வோர் புகார் தெரிவித்து நிவாரணம் பெற ஏதுவாக நவம்பர் 9ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள காந்தலட்சுமி கல்யாண மண்டபத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, இணை ஆணையாளர் மகேஸ்வரன் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
உயர் அலுவலர்களும், எரிவாயு முகவர்கள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். எனவே சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு எண்ணை நிறுவன உயர் அலுவலர்களிடம் தங்கள் குறைகள் மற்றும் புகாரினை நேரடியாக தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)