மலப்புரம், நவ.4 (டிஎன்எஸ்)
கேரளாவில் நடு ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 8 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
மலப்புரம் மாவட்டம் ஹரிகோடுவில் உள்ள சாளியாற்றில் 30 பேருடன் படகு ஒன்று ஆற்றின் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 8 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
பலியான மாணவர்கள் அனைவரும் 15 முதல் 18 வயதைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
கேரள மாநில சுற்றுலாத்தலமான தேக்கடி ஏரியில் கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி படகு கவிழ்ந்து, சுற்றுலா பயணிகள் 47 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
(டிஎன்எஸ்)
Nov 04, 2009
* Do not use semicolon(;)