சென்னை, செப்.24 (டிஎன்எஸ்)
2008-09ஆம் ஆண்டிற்கான ஈவுத் தொகையாக 11 கோடியே 2 ஆயிரத்து 50 ரூபாய்க்குரிய வரைவுக் காசோலையை தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று வழங்கியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்று (24.9.2009), தமிழ்நாடு செய்தித்தாள் - காகித நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவனத்தின் 2008-09ஆம் ஆண்டிற்கான ஈவுத் தொகையாக 11 கோடியே 2 ஆயிரத்து 50 ரூபாய்க்குரிய வரைவுக் காசோலையை தொழில்துறை முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் தலைவருமான எம்.எப். பாருகி வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசின், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முகமது நசீமுத்தின் ஆகியோர் உடனிருந்தனர்.
(டிஎன்எஸ்)
Sep 24, 2009
* Do not use semicolon(;)