
காபூல், நவ.3 (டிஎன்எஸ்)
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ஹமித் கர்சாய் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த முதல் சுற்று அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் கர்சாய் அதிக வாக்குகள் பெற்று இருந்தார்.
அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக புகார் கூறப்பட்ட நிலையில், நவம்பர் 7ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த 2ஆவது சுற்று தேர்தலில் அதிபர் கர்சாயை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா அப்துல்லா, இந்த சுற்று தேர்தலிலும் மோசடி நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறி போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதனால் 2ஆவது சுற்று தேர்தல் களத்தில் கர்சாய் மட்டுமே இருந்ததாலும், முதல் சுற்று தேர்தலில் அவர் அதிக வாக்குகள் பெற்று இருந்ததாலும், அதிபர் தேர்தலில் கர்சாய் வெற்றி பெற்று மீண்டும் ஆப்கானிஸ்தானின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணைய தலைவர் அஜியுல்லா லுடின் நேற்று அறிவித்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் சென்றுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் நேற்று முன்தினம் அதிபர் கர்சாயையும், அப்துல்லாவையும் சந்தித்துப் பேசினார்.
(டிஎன்எஸ்)
Nov 03, 2009
* Do not use semicolon(;)