குண்டூர், மார்ச் 13 (டிஎன்எஸ்) ஆந்திர மாநிலம் குண்டூரில் மூத்த மாணவிகளின் ராகிக் கொடுமை காரணமாக வேளாண் பட்டப்படிப்பு மாணவி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார்.
20 வயதாகும் அந்த மாணவி ஆந்திர அரசு வேளாண் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் பயின்று வருகிறார். அவரது மூத்த மாணவிகள் கல்லூரியில் அவரை நிர்வாணமாக ஆடச் சொன்னதாக தெரிகிறது.
இதனால் விரக்தி அடைந்த அந்த மாணவி பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவருக்கு நினைவு திரும்பியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் இமாச்சல பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ராகிக் கொடுமையில் சிக்கி மாணவர் ஒருவர் பலியானார். இந்த கொடுமையின் பதட்டம் தணிவதற்குள் ஆந்திராவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆந்திர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். (டிஎன்எஸ்)
Mar 13, 2009
* Do not use semicolon(;)