லண்டன், அக்.7 (டிஎன்எஸ்)
2009ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு, 'வொல்ப் ஹால்' ('Wolf Hall') என்ற நாவலை எழுதியதற்காக இங்கிலாந்தின் ஹிலாரி மேன்டெல் என்ற நாவலாசிரியைக்கு வழங்கப்பட்டுள்ளது.
57 வயதாகும் ஹிலாரி மேன்டெல் 16ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தை மையப்படுத்தி 'வொல்ப் ஹால்' என்ற இந்த நாவலை எழுதி உள்ளார்.
புக்கர் பரிசு என்பது இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹிலாரிக்கு 50 ஆயிரம் பவுண்ட் பரிசுப் பணமாக செவ்வாய்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர் இந்த விருதை சல்மான் ருஷ்டி, அனிதா தேஷாய், அரவிந்த் அடிகா, அருந்ததி ராய் போன்ற இந்திய எழுத்தாளர்கள் வென்றுள்ளனர். ஆனால் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியர் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விருதைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஹிலாரி மேன்டெல் குறிப்பிடுகையில், "இந்த நிமிடம் நான் மகிழ்ச்சி வெள்ளத்தில் வானத்தில் பறப்பதைப் போல் உணருகிறேன்" என்றார்.
இந்த நாவலின் கதை சொல்லும் தைரியம், காட்சி அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2009ஆம் ஆண்டுக்கான புக்கர் விருதுக்கு ஹிலாரி மேன்டெலைத் தேர்வு செய்ததாக, நீதிபதிகள் குழுவின் தலைவர் ஜேம்ஸ் நாட்டி தெரிவித்துள்ளார்.
(டிஎன்எஸ்)
Oct 07, 2009
* Do not use semicolon(;)