
சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துள்ள உறுப்பினர்களுக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் அடையாள அட்டைகளை வழங்கினார்.
உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் 26 நல வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
சிந்தாதிரிப்பேட்டை கல்யாணம் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 452 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அவர்களுக்கான மருத்துவச் செலவாக ரூ.2 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 750 வழங்கப்பட்டுள்ளது. 51 நோய்களுக்கான உயர் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனை கள் உட்பட பல மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 2ஆம் தேதி நிலவரப்படி 2 லட்சத்து 80 ஆயிரத்து 447 உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். உறுப்பினர்களை சேர்க்கும் பணி முழுமையான அளவில் நடந்து வருகிறது.
இதுவரை 13,606 பேருக்கு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நல வாரிய உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.72 ஆயிரத்திற்கு குறைவான வருமானமுடைய வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)