சென்னை, நவ.5 (டிஎன்எஸ்)
திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் ராஜகுமாரி, தனது கள்ளக்காதலனுக்கு நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை கடத்திச் சென்று எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்டார். இதையடுத்து ராஜகுமாரி அ.இ.அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.இ.அ.தி.மு.க. கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், அ.இ.அ.தி.மு.க. கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திருச்சி புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ராஜகுமாரி (32) இன்று முதல் அ.இ.அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.
இவ்வாறு ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
(டிஎன்எஸ்)
Nov 05, 2009
* Do not use semicolon(;)