மும்பை, நவ.4 (டிஎன்எஸ்)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சிறிது பாதிப்பு இருந்தாலும் தொடர்ந்து அதிகரித்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 507.19 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 15,912.13 ஆக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 146.90 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 4,710.80 ஆக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1774 பங்குகளின் விலை அதிகரித்தது. 946 பங்குகளின் விலை குறைந்தது. 59 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
யுனிடெக், ஜெட் ஏர்வேஸ், டிஎல்எஃப், எடுகாம்ப், கோத்ரெஜ் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.
சுஸ்லான் எனர்ஜி, அல்ட்ராடெக் சிமென்ட், டாடா பவர், கோல்கேட் பாமோலிவ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
(டிஎன்எஸ்)
Nov 04, 2009
* Do not use semicolon(;)