X

rediuser1

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை நிறுத்த அமெரிக்கா முயற்சி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. அதில் இருந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. கடந்த 7ஆம் தேதியில் இருந்து பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. அத்துடன் எல்லையில் உள்ள இந்திய பகுதிகள் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தியதனால் தான் நாங்களும் தாக்குதல் நடத்துகிறோம் என பாகிஸ்தான் சொல்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறோம் என இந்தியா கூறி வருகிறது. இதனால் பதற்றம் தணியவில்லை. இதற்கு இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்க வெளியறவுத்துறை மார்கோ ரூபியோ இரு தரப்பிலும் பேசி வருகிறார்.… Read More

தமிழகத்தில் மாதந்தோறும் இலவச மருத்துவ முகாம்கள்!

சட்டப்பேரவை மானியக்கோரிக்கையின்போது 1256 முகாம்கள் மூலம் மக்களைத்தேடி உயர் மருத்துவ சேவைகள் ரூ.9.42 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதன்படி மாதிரி மருத்துவ முகாம் இன்று… Read More

இந்திய ராணுவத்திற்கு 7.5 லட்சம் லாரிகளை வழங்க அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் முடிவு

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் இருந்து சுமார் 1.5 லட்சம் லாரிகள் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஏ.ஐ.டி.எம்.சி. மாநிலத் தலைவர் சி.எல். முகதி கூறியதாவது:- மத்தியப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட சுமார் 7.5 லட்சம் லாரிகளை இந்திய ராணுவத்திற்கு வழங்குவதாக பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். ஆபரேஷன் சிந்தூர் குறித்து முழு நாடும் பெருமைப்பட வேண்டும். இதுபோன்ற பதற்றமான காலங்களில் ராணுவத்திற்கு இலவசமாக வழங்க பதிவுசெய்யப்பட்ட லாரிகளை நாங்கள் தயார் செய்துள்ளோம். எல்லைப் பகுதிகளில் நமது ராணுவம் காட்டிய துணிச்சலால் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். Read More

இந்தியா, பாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் – ஜி7 நாடுகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 26 சுற்றுலா பயணிகள் உயிர் இழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா தனது அசுர… Read More

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதி – முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவிப்பு

காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் இன்று நடத்திய தாக்குதலில் அரசு அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களில் ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். Read More

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 12-ந்தேதி வரை ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13 மற்றும் 14-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனிடையே, இன்று முதல் 13-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். Read More

Study Finds Cholesterol Pill May Help Reduce High Risk of Heart Attack and Stroke

A new study has found that a cholesterol pill may help lower the risk of heart attacks and strokes in… Read More

Study Finds Weight-Loss Drugs Can Reduce Alcohol Consumption by Nearly Two-Thirds

A new study has shown that weight-loss drugs can help people reduce their alcohol consumption by almost two-thirds. The research… Read More

Five TN Students Return Safely from Punjab Amid Rising India-Pakistan Tensions

Five students from Tamil Nadu have safely returned home from Punjab as tensions between India and Pakistan continue to grow.… Read More

Chennai Airport Increases Security After ‘Operation Sindoor’; Passengers Asked to Arrive Early

Chennai Airport has increased security measures following a recent alert under 'Operation Sindoor'. The airport authorities have advised all passengers… Read More