X

Tamil

தருபுமரியில் 17 வயது சிறுவனை சாதி பெயரை சொல்லி கட்டி வைத்து தாக்கப்பட சம்பவம் – 4 பேர் மீது வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 17 வயது சிறுவனை சாதி பெயரை சொல்லி இரவு முழுவதும் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. தென்கரைக்கோட்டையை சேர்ந்த… Read More

பாபா ராம் தேவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய டெல்லி உயர் நீதிமன்றம்!

ஹம்டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது. இந்நிலையில் பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம் தேவ் தங்கள் நிறுவன பானத்தை விளம்பரப்படுத்த வேண்டி சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பேசிய அவர், அஃப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள் என பேசிய ராம்தேவ், இது லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று கூறினார். இந்நிலையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து ஹம்டாட் லேப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹம்தர்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்த விவகாரம் அவமானகரமானது. இது ஒரு வெறுக்கத்தக்க பேச்சு. இது வகுப்புவாத பிளவை உருவாக்குகிறது என்று தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி, "இந்த விவகாரம் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இது நியாயமல்ல" என்று பாபா ராமதேவ் வழக்கறிஞரை நோக்கி காட்டமாக தெரிவித்தார். இதன்பின் பேசிய ராம்தேவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் தொடர்பான அனைத்து அச்சு அல்லது வீடியோ வடிவ விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உடனடியாக நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில், ரூஹ் அஃப்சா என்ற சத்துபானம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பாபா ராம்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், "உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், அவர் (பாபா ராம்தேவ்) யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர் தனி உலகில் வாழ்கிறார்" என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.… Read More

பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் – அமைச்சர் அமித்ஷா பேச்சு

ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல் முறையாக மத்திய உள்துறை… Read More

தெருக்களில் நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட இளைஞர் கைது!

சென்னை தெருக்களில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை முகப்பேர் பகுதியில் தனியாக நடந்து சென்ற 19 வயது இளம்பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்த போலீசார், அம்பத்தூர் அருகே டாஸ்மாக்கில் அந்த இளைஞர் ஜிபே மூலம் பணம் செலுத்தியதை கண்டுபிடித்தனர். ஜிபே எண் மூலம் நீலாங்கரையை சேர்ந்த சரத்பாபு (31) என்ற தனியார் வங்கி கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சரத்பாபு, அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கைதான சரத்பாபு, எழும்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறிய புகாரில் ஏற்கனவே கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது Read More

அரசு ஊழியர்களின் சொத்துக்கள் விவரங்களை வெளியிட முடியாது – தமிழ்நாடு தகவல் ஆணையம்

அரசு ஊழியர்களின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும், பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை… Read More

ஏப்ரல் மாதம் ரூ.2.37 லட்சம் கொடி ஜி.எஸ்.டி வரி வசூல்!

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.2.37 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் வரி வசூலாகியுள்ளது.என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தியதில்… Read More

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நேற்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில்… Read More

விரைவில் மதுரை மக்களை சந்திப்பேன் – த.வெ.க தலைவர் விஜய் பேட்டி

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான… Read More

தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை!

தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உள்துறை செயலாளர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்… Read More

அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தாக்குதல்

தஞ்சை அருகே ரெங்கநாதபுரத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள்… Read More