X

Tamil

பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சட்டசபையில் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: * மொழி, உணர்ச்சி, மொழி, மானம், மொழி பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம் பாவேந்தர் பாரதிதாசன். * பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை. * பல இளம் கவிஞர்களை உருவாக்கியவர் பாவேந்தர் பாரதிதாசன். * பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.25 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். * தமிழர் உணர்விலும் குருதியிலும் கலந்த புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் வார விழா கொண்டாடப்படும். * கவிஞர் பாரதிதாசனை போற்றும் வகையிலான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். * பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும். * அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.… Read More

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை… Read More

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் வழக்கு – இரண்டு பேருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர். கடந்தாண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டவர்கள்… Read More

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார். Read More

உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு

2022 இல் தொடங்கிய உக்ரைன்- ரஷியா போர் 4 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையேயும் போர் நிறுத்தம் ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுடன் நேரடி போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என ரஷிய அதிபர் புதின் முதல்முறையாக அறிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி 30 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. நேற்று இந்த போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க உக்ரைன் அழைப்பு விடுத்தது. குறைந்தபட்சம் பொதுமக்கள் வசிக்கும் இலக்குகளைத் தாக்கக்கூடாது என்ற தனது திட்டத்தை உக்ரைன் தொடர்கிறது. மேலும் மாஸ்கோவிடமிருந்து தெளிவான பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியிருந்தார். இந்நிலையில் ரஷிய அரசுத் தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புதின், போர் நிறுத்தம் குறித்து எங்களுக்கு நேர்மறையான அணுகுமுறை உள்ளது. எந்தவொரு அமைதி முயற்சிகளுக்கும் நாங்கள் திறந்திருக்கிறோம், உக்ரைனும் அதற்கு விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பேசியுள்ளார். இதற்கிடையே அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த வாரம் லண்டனில் சந்திக்க உள்ளனர். Read More

அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிரணி போராட்டம்!

தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சையானது. அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார். சென்னை ஐகோர்ட்டும், அமைச்சர் பொன்முடி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக அமைச்சர் பொன்முடியை கண்டித்து சேலத்தில் அ.தி.மு.க. மகளிரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. மகளிரணி கண்டன போராட்டத்தில் நடிகை கவுதமி பங்கேற்றார். போராட்டத்தில் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கவுதமி உள்ளிட்டோர் முழக்கமிட்டனர். Read More

சென்னைய்ஹில் புறந்கர் ரெயில் தடம் புரண்டு விபத்து

ஆவடியில் இருந்து வந்த புறநகர் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை ராயபுரம் - கடற்கரை நிலையம் இடையே மின்சார ரெயில் தடம் புரண்டது விபத்துக்குள்ளானது. ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் 3-வது பெட்டியில் 2 ஜோடி சக்கரங்கள் தடம் புரண்டது. சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. மிதமான வேகத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டதால் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. Read More

யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், * சட்டசபை சபாநாயகர் இன்று நடந்து கொண்ட விதம் ஜனநாயக படுகொலை. * ஒரு துறையின் பிரச்சனையை 10 நிமிடத்தில் எப்படி பேசமுடியும். ஆக்கப்பூர்வமாக கருத்துகளை கூறுவதற்கு நேரம் கொடுக்க மறுக்கிறார்கள். * மக்கள் பிரச்சனை பேசுவதற்கு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. * அ.தி.மு.க. ஆட்சியில் அனைவருக்கும் பேசுவதற்கு நாங்கள் வாய்ப்பு கொடுத்தோம். * முறையாகத்தான் அனுமதி கேட்டேன். தவறாக இருந்தால் நீக்கி விடுங்கள் என்று கூறினேன். * டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக யாரும் பதில் கூறவில்லை. * யாரும் பதில் கூறாததால் ரூ.1000 கோடி முறைகேடு புகார் நிரூபணம் ஆகிறது. * மதுபாட்டிலுக்கு ரூ.10 வீதம் கூடுதலாக விற்பதால் ரூ.5,400 கோடி கிடைக்கிறது என்றார். Read More

ஏப்ரல் 25 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும் – நீதிமன்றம் உத்தரவு

இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், * ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும். * தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும். * சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது. * சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார். Read More