apollo children’s hospital – Chennaionline

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் உலக சாதனை!
சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, அறுவைசிகிச்சைக்கு முன்னதாக தயாரிப்பு ஏற்பாடுகள் எதுவுமின்றி 50 பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சை செயல்முறைகளை நிகழ்த்தி உலகளவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதை பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. சிக்கலான ஒற்றை-இதயக்கீறை நோயால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு, வழக்கமான திறந்தநிலை இதய ஃபோன்டன் அறுவைசிகிச்சைக்கு மாற்றாக கதீட்டர் அடிப்படையிலான அணுகுமுறையைப் பயன்படுத்தியிருக்கும் இச்சாதனை, வளர்ந்து வரும் மருத்துவ அனுபவத்தையும் நவீன தொழில்நுட்பத் திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

உடலில் இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க ஒரே ஒரு இதய கீழறை மட்டுமே செயல்படும் சிக்கலான இதயக் குறைபாடுகளுடன் சில குழந்தைகள் பிறக்கின்றன. இக்குழந்தைகளுக்கு ஃபோன்டன் செயல்முறையே சிகிச்சையின் இறுதி கட்டமாகும். இது உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து திரும்பும் இரத்தத்தை நேரடியாக நுரையீரலுக்கு திருப்பி விடுகிறது, இதன் மூலம் அந்த ஒற்றை இதயக் கீழறை ஆக்ஸிஜன் செறிவான இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துகிறது.

அப்போலோவின் குழந்தைகளுக்கான இதயவியல் மற்றும் இதய அறுவைசிகிச்சை மருத்துவக் குழுவினரால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட இந்த தொழில்நுட்பம், முன்னதாக எந்தவொரு அறுவைசிகிச்சை ஏற்பாடுகளும் இன்றி, அறுவைசிகிச்சையின் போது இரத்த நாளங்கள் வழியாக கதீட்டர்கள், வயர்கள் மற்றும் ஸ்டெண்டுகளைப் பயன்படுத்தி ஃபோன்டன் வழிமுறையை முழுமையாகச் செய்து முடிக்க உதவுகிறது.

குழந்தைகளுக்கான இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் சி.எஸ். முத்துகுமரன் கூறுகையில், “ஒற்றை-இதயக் கீழறை நோயுள்ள குழந்தைகளுக்கு ஃபோன்டன் கட்டத்திற்கு முன்பே பல பெரிய இதய அறுவைசிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளது. உடற்கூறியலும், இரத்த இயக்கவியலும் பொருத்தமாக இருக்குமானால், கதீட்டர் அடிப்படையிலான இச்செயல்முறை மற்றொரு திறந்தநிலை அறுவைசிகிச்சை இல்லாமலேயே ஃபோன்டன் வழிமுறையைச் செய்ய வழிவகுக்கிறது. பெரிய இதய சிகிச்சைக்குட்பட்ட குழந்தைக்கு மற்றொரு அறுவைசிகிச்சையின் வலியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்” என்றார்.

இந்த அணுகுமுறை எல்லா குழந்தைகளுக்கும் ஏற்றதாக அமையாது. நோயாளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு, நுரையீரல் தமனி உடற்கூறியல் மற்றும் அழுத்தங்கள், இதய கீழறையின் செயல்பாடு மற்றும் சிரை வழிகள் உள்ளிட்ட இதய உடற்கூறியல் மற்றும் இரத்த இயக்கவியல் பற்றிய விரிவான மதிப்பீடு தேவைப்படுகிறது. நோயாளியின் நிலையைப் பொறுத்து, எக்கோ கார்டியோகிராபி, சிடி ஸ்கேன் மற்றும் கார்டியாக் கேத்தடரைசேஷன் போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம்.

இதய-மார்பறை அறுவைசிகிச்சை சேவைகள் இயக்குநர் டாக்டர் நெவில் ஏ.ஜி. சாலமன் கூறுகையில், “அறுவைசிகிச்சைக்குப் பதிலாக முழுமையான மாற்றாக இருப்பது இப்புதிய தொழில்நுட்பத்தின் நோக்கமல்ல. ஒவ்வொரு குழந்தைக்கும் சிறந்த சிகிச்சையைத் தீர்மானிக்க, இதயவியல் மற்றும் இதய அறுவைசிகிச்சை ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்துச் செயல்படுவதாகும். சில குழந்தைகளுக்கு அறுவைசிகிச்சையே சிறந்த தேர்வாக இருக்கும். அதே நேரத்தில் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு, இந்த கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சை சிறந்த மாற்று வழியாகும்” என்றார்.

அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகளுக்கான 14,000-க்கும் மேற்பட்ட கதீட்டர் அடிப்படையிலான இதய சிகிச்சைகளை செய்திருப்பது குழந்தைகளுக்கு சிக்கலான இதய சிகிச்சையில் இம்மருத்துவமனையின் சிறந்த அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது. 50 சிகிச்சை செயல்முறைகள் என்ற இந்த சாதனை, இந்த அணுகுமுறையில் இம்மருத்துவமனையின் அதிகரித்து வரும் நிபுணத்துவத்திற்கும், அனுபவத்திற்கும் சான்றாக இருக்கிறது. தற்போதைய மருத்துவ சான்றுகள் இதன் சாத்தியக்கூறு மற்றும் ஊக்கமளிக்கும் ஆரம்பகால சிகிச்சை விளைவுகளை நிரூபித்தாலும், வழக்கமாக அறுவைசிகிச்சை முறையில் செய்யப்படும் ஃபோன்டானுடன் ஒப்பிடுகையில் பெர்குடேனியஸ் ஃபோன்டன் சிகிச்சையின் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதைப் புரிந்துகொள்ள நீண்டகால அடிப்படையிலான ஒப்பீட்டு தரவுகள் தேவைப்படுகின்றன.

அப்போலோ மருத்துவமனைகளின் செயல் உத்திகளுக்கான இயக்குநர் திருமதி. சிந்தூரி ரெட்டி கூறுகையில், “ஒரு சிக்கலான நோய்க்கு எவ்வாறு சிகிச்சையளிக்கலாம் என நாங்கள் மறு சிந்தனை செய்யும்போது, சாத்தியமான சிகிச்சை வாய்ப்புகளை விரிவுபடுத்துகிறோம். தோல் வழியாக ஃபோன்டன் சிகிச்சைகளில் 50 என்ற இலக்கை எட்டியிருப்பது அதையே பிரதிபலிக்கிறது. இது தகுதியான குழந்தைகளுக்கு மற்றொரு திறந்தநிலை அறுவைசிகிச்சைக்கு மாற்றாக குறைந்தபட்ச ஊடுருவல் சிகிச்சையை வழங்குகிறது. மருத்துவ நிபுணத்துவத்தையும் புதிய தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து சிகிச்சையின் வரம்பெல்லையை விரிவுபடுத்துவதே எமது செயல்திட்டமாகும்” என்றார்.

இந்நிகழ்வில் அப்போலோவின் சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் களியமூர்த்தி, சென்னை அப்போலோ மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சுசீலா நாராயணசாமி மற்றும் மருத்துவக் குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த அணுகுமுறை மருத்துவ அனுபவம் மற்றும் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஆரம்பக்கட்ட ஆய்வறிக்கை 2023-ல் ‘Progress in Pediatric Cardiology’ இதழிலும், நோயாளி தேர்வு குறித்த விரிவான அறிக்கை 2024-ல் ‘JACC: Case Reports’ இதழிலும், இதன் மேம்படுத்தப்பட்ட அறிக்கை 2025-லும் வெளியானது.

சிக்கலான பிறவி இதய நோயைக் கையாளுவதில் கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சை முறைகளின் வளர்ச்சியை இந்த சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதே நேரத்தில், கவனமான நோயாளி தேர்வு, பல்துறை நிபுணர்களின் கூட்டு முடிவு மற்றும் தொடர்ச்சியான மருத்துவக் கண்காணிப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.

அப்போலோ மருத்துவமனைகள் குறித்து:இதன் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, 1983-ல் சென்னையில் முதல் மருத்துவமனையைதொடங்கினார். 78 மருத்துவமனைகளில் 10,900 படுக்கைகள், 7200+ மருந்தகங்கள், 300 கிளினிக்குகள், 2,500 நோயறிதல் மையங்களுடன் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநராக அப்போலோகுழுமம்இப்போதுவளர்ந்துள்ளது. 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டிகள், 2,00,000-க்கும் மேற்பட்ட அறுவைசிகிச்சைகளை இதுவரைசெய்துள்ள அப்போலோ, மேம்பட்ட சிகிச்சையை வழங்க புதியதொழில்நுட்பத்திலும், ஆராய்ச்சியிலும்தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.