BLAZO i-TRK – Chennaionline

மஹிந்திராவின் புத்தம் புதிய BLAZO i-TRK! – இந்தியாவில் அதிக லாபகரமான மற்றும் அதிநவீன ஸ்மார்ட் டிரக்கிங் துறையில் புதிய மைல்கல்
மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா டிரக் அண்ட் பஸ் (Mahindra Truck and Bus), இன்று முற்றிலும் புதிய BLAZO i-TRK அறிமுகத்தை அறிவித்துள்ளது. இது ‘ப்ராஃபிட் கா ராக்கெட்’ (Profit Ka Rocket) என்ற ஒற்றை வாக்குறுதியை மையமாகக் கொண்டு, டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை ஹெவி கமர்ஷியல் டிரக் ஆகும்.

வெறும் டிரக்காக மட்டுமில்லாமல், ஒரு முழுமையான வணிகத் தீர்வாகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள BLAZO i-TRK, அதன் பிரிவிலேயே சிறந்த எரிபொருள் சிக்கனம், உயர் செயல்திறன் கொண்ட பவர்டிரெய்ன், அறிவார்ந்த கனெக்டெட் தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில்துறையில் முன்னணியில் உள்ள ஆப்டைம் கேரண்டி (Uptime Guarantee) ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் வருவாயை அதிகரிக்கவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், தங்களது வாகனங்களின் மீது சிறந்த கட்டுப்பாட்டைச் செலுத்தவும் உதவுகிறது.

BLAZO i-TRK ஆனது வாடிக்கையாளா்களுக்கான மூன்று சக்திவாய்ந்த உறுதிமொழிகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது:

அதிகமாகச் சம்பாதிக்கலாம் (Earn More)

10% வரை கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் BLAZO i-TRK, AI-தொழில்நுட்பத்துடன் கூடிய ‘iFUELSMART auto drive’ மோட், TurboMAXX டர்போசார்ஜர், OptiFuel ஏர் கம்ப்ரஸர் மற்றும் பல வன்பொருள் (hardware) தீர்வுகள் மற்றும் மென்பொருள் (software) கண்டுபிடிப்புகளை உள்ளடக்கியுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொட்டு எரிபொருளிலிருந்தும் அதிகபட்ச மதிப்பைப் பெற உதவுகின்றன. இந்த ஒட்டுமொத்த சேமிப்புகள் ஐந்து ஆண்டுகளில் ஒரு டிரக்கிற்கு ₹15 லட்சம்* வரை கூடுதல் லாபத்தை வழங்கக்கூடும், இது வாடிக்கையாளர்கள் தங்களது வணிகத்தை விரைவாக வளர்க்க உதவுகிறது.

அதிகமாக இயக்கலாம் (Run More)

BLAZO i-TRK மாடல் வரம்புகள் அனைத்திலும் மஹிந்திராவின் நம்பிக்கையான மற்றும் மிகச் சிறந்த 320 HP mPOWER எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது வலுவான செயல்திறன், அதிக நம்பகத்தன்மை மற்றும் சிறந்த உற்பத்தித்திறனை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் வசதி – COMFiMAXX சஸ்பென்டட் சீட், EzyCruise க்ரூஸ் கண்ட்ரோல், கைகளைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாகப் பேசுவதற்கான மைக் வசதியுடன் கூடிய ப்ளூடூத் மியூசிக் சிஸ்டம், விசாலமான, பிரீமியம் மற்றும் சௌகரியமான ஏசி கேபின் – ஆகியவற்றின் மூலம் நீண்ட தூரப் பயணங்களின் போது ஓட்டுநர்களின் உற்பத்தித்திறனைத் தக்கவைத்து, வாகனங்களை அதிக திறனுடன் கூடுதல் பயணங்களை நிறைவு செய்ய அனுமதிக்கிறது.

ஒவ்வொரு BLAZO i-TRK வாகனமும், வாகனத்தின் செயல்பாட்டை அதிகப்படுத்தவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட மஹிந்திராவின் விரிவான சேவை உத்தரவாதத் திட்டத்தின் (Service Assurance Programme) ஆதரவைப் பெற்றுள்ளது. இதன் முக்கிய அம்சமாக, தொழில்துறையிலேயே முதன்முறையாக 48 மணிநேர ஆப்டைம் கேரண்டி (Uptime Guarantee)* வழங்கப்படுகிறது. இதன்படி வாக்குறுதிளிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள்* வாகனம் மீண்டும் இயங்கச் செய்யப்படவில்லை எனில், வாடிக்கையாளர்களுக்கு நாளொன்றுக்கு ₹10,000* வீதம் வழங்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் 75 கி.மீ வரம்பிலும், மாநில நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ வரம்பிலும் அமைந்துள்ள சேவை மையங்கள் மற்றும் மஹிந்திரா குவிக் சர்வீஸ் பாயிண்டுகளின் (mQSPs) விரிவடைந்து வரும் நாடு தழுவிய நெட்வொர்க் இதற்கு உறுதுணையாக உள்ளது.

மேலும், டீலர் நெட்வொர்க் முழுவதும் 250 முக்கியமான உதிரிபாகங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் மஹிந்திராவின் ஸ்பேர் பார்ட்ஸ் சப்ளை கேரண்டி (Parts Supply Guarantee)* இந்த மதிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. உத்தரவாதம் அளிக்கப்பட்ட உதிரிபாகம் வாக்குறுதியளிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் கிடைக்கவில்லை என்றால், வாடிக்கையாளர் அந்தந்த உதிரிபாகத்தை இலவசமாகப் பெற உரிமையுடையவர்* ஆவர். மேலும் இது 100-க்கும் மேற்பட்ட உதிரிபாகங்களுக்குப் பிரிவிலேயே சிறந்த உத்தரவாதத்தையும் (Warranty) வழங்குகிறது.

அதிகமாகக் கட்டுப்படுத்தலாம் (Control More)

BLAZO i-TRK வாகனமானது மஹிந்திராவின் அடுத்த தலைமுறை கனெக்டெட் வாகனத் தளமான ‘iMAXX 2.0’ வசதியுடன் வருகிறது. இது ஒரு எளிமையான கணினி மற்றும் மொபைல் இடைமுகம் (interface) மூலம் நிகழ்நேர வாகனத் தகவல்கள், முன்கூட்டியே கோளாறுகளைக் கண்டறியும் வசதி (predictive diagnostics), ஓட்டுநரின் நடத்தையைக் கண்காணித்தல், பராமரிப்பு மேலாண்மை மற்றும் பயனுள்ள வணிக நுண்ணறிவுகளை வழங்குகிறது. சிறந்த முடிவெடுத்தல் மற்றும் முன்கூட்டியே ஃபிளீட் மேலாண்மை செய்வதை சாத்தியமாக்குவதன் மூலம், iMAXX 2.0 வாடிக்கையாளர்களின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி லாபத்தை அதிகப்படுத்த உதவுகிறது.

எங்களது வாடிக்கையாளர்களின் கைகளில் அதிக கட்டுப்பாட்டை வழங்குவதற்காக, BLAZO i-TRK உடன், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் நீண்ட கால (6 ஆண்டுகள்/6 லட்சம் கி.மீ / 8 ஆண்டுகள்/8 லட்சம் கி.மீ) mCARE வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்கள் (AMC) மற்றும் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத் திட்டங்கள் (டிப்பர்களுக்கு 6,000-10,000 மணிநேரம்) இப்போது கிடைக்கின்றன– இவை வாகனம் வைத்திருக்கும் காலம் முழுவதிலும் குறைந்த பராமரிப்புச் செலவுகளையும், சிறந்த மனநிம்மதியையும் உறுதி செய்கின்றன.

புதிய ‘Now24x7’ மொபைல் செயலியானது, வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட்டர்களின் கைகளில் முழுமையான கட்டுப்பாட்டை வழங்கி, அவர்களின் தொலைபேசியிலேயே ஒரு முழுமையான டிஜிட்டல் வாடிக்கையாளர் அனுபவத்தை அளிக்கிறது. இந்தச் செயலி வாடிக்கையாளர்களுக்கு பிரேக்டவுன் உதவி கோரிக்கைகளை எழுப்பவும், கண்காணிக்கவும், முடிக்கவும், பிரேக்டவுன் வாகனத்தின் இருப்பிடத்தை நிகழ்நேரத்தில் பார்க்கவும், பழுதுபார்க்கும் ஆர்டர்களுக்கான டிஜிட்டல் ஒப்புதல்களை விரைவாகச் செய்யவும், உதிரிபாகங்களை நேரடியாக ஆர்டர் செய்யவும், முழுமையான சேவை வரலாற்றை ஒரே இடத்தில் அணுகவும், நினைவூட்டல்களுடன் முன்பதிவு செய்து எந்தவொரு பராமரிப்பு நேரத்தையும் தவறவிடாமல் இருக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு செயல்பாட்டின் போதும் மஹிந்திராவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதன் மூலம், Now24x7 செயலியானது வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை மிகவும் திறமையாக நிர்வகிக்கவும், வாகனம் இயங்காத நேரத்தைக் குறைக்கவும், எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகிறது.

ஒன்றாக இணைந்து, இந்த மூன்று உறுதிமொழிகளும் BLAZO i-TRK வாகனத்தை வெறும் ஹெவி கமர்ஷியல் வாகனத்தை விட மிகவும் மேலான ஒன்றாக மாற்றுகின்றன. வாடிக்கையாளர்கள் அதிகமாகச் சம்பாதிக்கவும் (Earn More), அதிகமாக இயக்கவும் (Run More) மற்றும் அதிகமாகக் கட்டுப்படுத்தவும் (Control More) உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான லாபகரமான சுற்றுச்சூழல் அமைப்பை இவை உருவாக்கி, வாகனம் இருக்கும் காலம் முழுவதிலும் அளவிடக்கூடிய வணிக மதிப்பை வழங்குகின்றன.

BLAZO i-TRK வாகனமானது கம்பீரமான தோற்றத்தையும், செயல்பாட்டுப் பொறியியலையும் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மஹிந்திராவின் நவீன ஹெவி கமர்ஷியல் வாகன அடையாளத்தை வலுப்படுத்தும் அதே வேளையில், வாகனத்தின் செயல்திறன், ஆயுட்காலம் மற்றும் ஓட்டுநரின் வசதியை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு வடிவமைப்பு அம்சமும் உருவாக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா BLAZO i-TRK வரம்பானது 3 வண்ணங்களில் வருகிறது, மேலும் இது அனைத்து மாடல்கள் மற்றும் பயன்பாடுகளிலும் கிடைக்கும்.

INTELLICORE வடிவமைப்பு

BLAZO i-TRK-ன் வடிவமைப்பானது, தனது ஹெவி கமர்ஷியல் வாகன வரம்பிற்காக மஹிந்திரா உருவாக்கியுள்ள INTELLICORE வடிவமைப்புத் தத்துவத்தின் முதல் வெளிப்பாடாகும். இதன் மையக் கருத்தாக, INTELLICORE தொழில்முறை அறிவாற்றலையும், குறிப்பிட்ட நோக்கத்தையும் டிரக்கின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒருங்கிணைத்து, தோற்றமும் செயல்பாடும் இணைந்து ஒரு சிறந்த வாகன உரிமை மற்றும் ஓட்டுநர் அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.

ஒவ்வொரு வெளிப்புற மற்றும் உட்புற அம்சங்களும் பயன்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், வாகனத்தின் திறனை வெளிப்படுத்தும் வகையில் சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அகலமான, கம்பீரமான கிரில் (grille) ஆற்றலையும் செயல்திறனையும் பிரதிபலிக்கிறது; இதனுடன் இணைந்துள்ள முழு அளவிலான, உயர் செயல்திறன் கொண்ட முகப்பு விளக்குகள் (headlamps) சாலையில் டிரக்கின் கம்பீரமான தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. உட்புறத்தில், கேபின் ஒரு ஓட்டுநரின் அலுவலகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநரை மையமாகக் கொண்ட, எளிமையான மற்றும் சௌகரியமான அமைப்பைக் கொண்டுள்ளதால், ஒவ்வொரு பணியையும் சிரமமின்றி திறம்படச் செய்ய முடிகிறது. இந்த வடிவமைப்பு பாணியை முழுமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ள தனித்துவமான ஸ்கைலைன் ப்ளூ (Skyline Blue) உடல் வண்ணம், BLAZO i-TRK-ன் அமைதியான, நம்பிக்கையான மற்றும் தொழில்முறை குணாதிசயத்தைப் பிரதிபலிக்கிறது.

மஹிந்திரா BLAZO i-TRK வரம்பானது 3 வண்ணங்களில் வருகிறது, மேலும் இது அனைத்து மாடல்கள் மற்றும் பயன்பாடுகளிலும் கிடைக்கும்.

இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த டிரக்ஸ் & பஸ்சஸ் தலைவரும், SML மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரும் மற்றும் மஹிந்திரா குழுமத்தின் குழு நிர்வாக வாரிய உறுப்பினருமான வினோத் சகாய் றுகையில், “இந்தியாவின் சரக்கு மற்றும் தளவாடத்துறை (freight and logistics sector) ஒரு புதிய வளர்ச்சி கட்டத்திற்குள் நுழைகிறது. இங்கு தொழில்நுட்பம், நம்பகத்தன்மை மற்றும் செயல்பாட்டுத்திறன் ஆகியவை மட்டுமே போட்டி நன்மையை நிர்ணயிக்கும்; மேலும் மறு விற்பனை (resale) போன்ற பழைய கருத்துக்கள் இனி பொருத்தமானதாக இருக்காது. எங்களது லட்சியம் சிறந்த டிரக்குகளை உருவாக்குவது மட்டுமல்ல, புத்தாக்கம் மற்றும் வலுவான வாடிக்கையாளர் பங்களிப்பின் மூலம் வணிக ரீதியான இயக்கத்தின் (commercial mobility) எதிர்காலத்தை வடிவமைப்பதாகும். BLAZO i-TRK ஸ்மார்ட் டிரக்கிங் மூலமாக இந்தத் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது; மேலும் தொழி ல்துறையிலுள்ள பிற டிரக்குகளுடன் ஒப்பிடும் போது, ஐந்து ஆண்டுகளில் ஒரு டிரக்கிற்கு ₹15 லட்சம்* வரை லாபத்தை அதிகரிக்கும் சாத்தியக்கூறுடன் உண்மையிலேயே இது ‘ப்ராஃபிட் கா ராக்கெட்’ (Profit Ka Rocket) ஆகத்திகழ்கிறது. அதே நேரத்தில், இது தொழில் துறையிலேயே முதன் முறையான மற்றும் நிகரற்ற ஆப் டைம் கேரண்டியுடன் (Uptime Guarantee) வருகிறது.” என்றார்.

இணைப்பு (ANNEXURE)

⮚ 320 HP mPOWER எஞ்சின்

BLAZO i-TRK-ன் மையப் பகுதியாக மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட 7.2-லிட்டர் mPOWER எஞ்சின் அமைந்துள்ளது. இது இப்போது BLAZO வரம்பு முழுவதிலும் 320 HP திறனை வழங்குகிறது. இதன் மூலம், அனைத்து ஹெவி கமர்ஷியல் வாகன வரம்புகளிலும் இந்த அளவிலான ஆற்றலை வழங்கும் ஒரே OEM (Original Equipment Manufacturer) நிறுவனமாக மஹிந்திரா திகழ்கிறது.

1100 முதல் 1700 rpm வரையிலான பரந்த இயக்க வரம்பில் 1100 Nm டார்க் (torque) திறனை உற்பத்தி செய்வதன் மூலம், இந்த எஞ்சின் பல்வேறு சாலை மற்றும் சுமை நிலைகளின் கீழ் சிறப்பான இழுவை திறன், சிறந்த கிரேடபிலிட்டி (ஏற்றங்களில் ஏறும் திறன்) மற்றும் சிரமமில்லாத பயணத்தை வழங்குகிறது.

இந்த பரந்த டார்க் பேண்ட் (torque band) கியர் மாற்றங்களை மென்மையாக்குவதோடு, வாகனத்தை மிகவும் சீராக இயக்கவும் அனுமதிக்கிறது. இதன் விளைவாக, மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சிக்கனம், ஓட்டுநருக்கு கூடுதல் சௌகரியம் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகள் ஆகியவை சாத்தியமாகின்றன.

இந்த எஞ்சின், எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும் புதுமையான தொழில்நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது:

TurboMAXX

mPOWER 320 hp எஞ்சினில் TurboMAXX டர்போசார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. இது எஞ்சினுள் காற்றுப் பாய்வை (airflow) மேம்படுத்துவதற்காக அதிக பூஸ்ட் அழுத்தத்துடன் (boost pressure) வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கப்பட்ட காற்றுப் பாய்வு, மிகவும் திறமையான எரிதலுக்கு (combustion) வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மேம்படுத்தப்பட்ட குறைந்த வரம்பு டார்க் (low-end torque), மென்மையான இயக்கம் மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனம் ஆகியவை சாத்தியமாகின்றன. குறைந்த எஞ்சின் வேகத்திலேயே வலுவான இழுவை திறன் கிடைப்பதால், டிரக்கிற்கு குறைந்த அளவிலான கியர் மாற்றங்களே தேவைப்படுகின்றன. இது குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தும் அதே வேளையில், வாகனத்தின் வேகத்தை சீராகப் பராமரிக்க அனுமதிக்கிறது.

TurboMAXX கூடுதல் எரிபொருள் சிக்கனத்திற்குப் பங்களிக்கிறது, இது BLAZO i-TRK-ன் பிரிவிலேயே சிறந்த மைலேஜை வழங்குவதற்கான முக்கியமான தொழில்நுட்பங்களில் ஒன்றாகும்.

OptiFuel

அறிவார்ந்த ‘OptiFuel Optimised Power Reduction Air Compressor’ எஞ்சின் ஆற்றலானது தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இந்த ஸ்மார்ட் கம்ப்ரஸர், தேவையான காற்று அழுத்தம் (air pressure) எட்டப்பட்டதும் தானாகவே துண்டிக்கப்பட்டு (disengage), எஞ்சினிலிருந்து வீணாக ஆற்றல் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. இந்தத் தேவையில்லாத ஆற்றல் இழப்புகளைக் குறைப்பதன் மூலம், OptiFuel துணை செயல்பாடுகளுக்குப் பதிலாக வாகனத்தின் இயக்கத்திற்காக அதிக எஞ்சின் ஆற்றலைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. இதன் விளைவு எரிபொருள் சிக்கனத்தை மேலும் மேம்படுத்தி, குறைந்த இயக்கச் செலவுகள் மற்றும் அதிக லாபத்திற்கு நேரடியாகப் பங்களிக்கிறது.

AI-தொழில்நுட்பத்துடன் கூடிய iFuelSmart

எரிபொருள் சிக்கனத் தொகுப்பில் முன்னணியில் இருப்பது ‘iFuelSmart’ ஆகும். இது ஹெவி கமர்ஷியல் வாகனப் பிரிவில் இந்தியாவின் முதல் AI-தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி டிரைவ் மோட் (automatic drive mode) ஆகும்.

ஓட்டுநர்கள் கைமுறையாக (manually) இயக்க மோட்களைத் தேர்ந்தெடுக்கும் வழக்கமான டிரக்குகளைப் போலல்லாமல், iFuelSmart ஆனது சாலையின் சரிவுகள், சுமை நிலைகள் மற்றும் ஓட்டுநர் தேவைகளைத் தொடர்ச்சியாக பகுப்பாய்வு செய்து, நிகழ்நேரத்தில் தானாகவே மிகச் சரியான டிரைவிங் மோட்டைத் தேர்ந்தெடுக்கிறது. மாறும் இயக்க நிலைமைகளுக்கு ஏற்ப எஞ்சின் செயல்திறனை அறிவார்ந்த முறையில் மாற்றி அமைப்பதன் மூலம், டிரக் எப்போதும் அதன் மிகவும் திறமையான எரிபொருள் அமைப்பில் (fuel-efficient configuration) இயங்குவதை இந்த அமைப்பு உறுதி செய்கிறது.

இந்த AI-தொழில்நுட்பமானது மோட் தேர்வுக்கு ஓட்டுநரின் தனிப்பட்ட முடிவுகளைச் சார்ந்திருக்கும் நிலையை நோக்கி, ஒவ்வொரு பயணத்தின் போதும் சீரான செயல்திறனை உறுதி செய்கிறது.

iMAXX 2.0

நவீன ஃபிளீட் மேலாண்மைக்காக (Fleet Management) வடிவமைக்கப்பட்டுள்ள ‘iMAXX 2.0’, வாகனத்தின் ஆரோக்கியம், ஓட்டுநரின் செயல்திறன், பராமரிப்புத் தேவைகள் மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான விவரங்களை வாகன உரிமையாளர்களுக்கு வழங்கி, வாகனம் இயங்காத நேரத்தைக் குறைக்கவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், ஒவ்வொரு வாகனத்திலிருந்தும் அதிகபட்ச லாபத்தைப் பெறவும் உதவுகிறது. இது தொழில்துறையிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்கும் பின்வரும் புதுமையான அம்சங்களை வழங்குகிறது:

ரிமோட் ஏசி மேலாண்மை (Remote AC Management)

வாகன உரிமையாளர்கள் தங்களது செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப, ஏசி (AC) அமைப்பை தொலைவிலிருந்தே (remotely) இயக்கவோ அல்லது முடக்கவோ முடியும். ஏசியின் பயன்பாட்டைச் சீரமைப்பதன் மூலம், தேவைப்படும் போது ஓட்டுநரின் வசதியைத் தக்கவைத்துக்கொள்ளும் அதே வேளையில், இந்த அம்சம் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சிக்கனத்திற்கும் பங்களிக்கிறது.

ரிமோட் வெஹிக்கிள் கிராங்க் இன்ஹிபிட் (Remote Vehicle Crank Inhibit)

இந்த அம்சம், அனுமதியற்ற எஞ்சின் இயக்கத்தை உரிமையாளர்கள் தொலைவிலிருந்தே தடுக்க அனுமதிக்கிறது. திருட்டு அல்லது தவறான பயன்பாடு போன்ற சூழ்நிலைகளில் வாகனப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, ஃபிளீட் சொத்துக்கள் மீது சிறந்த கட்டுப்பாட்டை உறுதி செய்கிறது.

ஏர் ஃபில்டர் அடைப்பு எச்சரிக்கைகள் (Air Filter Clogging Alerts)

இந்த அமைப்பு ஏர் ஃபில்டரின் ஆரோக்கியத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, அடைப்பு கண்டறியப்படும் போதெல்லாம் உடனுக்குடன் எச்சரிக்கைகளை வழங்குகிறது. முன்கூட்டியே கவனிப்பது எஞ்சினின் சிறந்த செயல்திறனைப் பராமரிக்க உதவுவதோடு, தவிர்க்கக்கூடிய பழுதுகள் மற்றும் எரிபொருள் சிக்கன இழப்பையும் தடுக்கிறது.

DPF செயல்திறன் எச்சரிக்கைகள் (DPF Performance Alerts)

நிகழ்நேர டீசல் பார்ட்டிகுலேட் ஃபில்டர் (DPF) கண்காணிப்பு சரியான நேரத்தில் அதை மறுஉருவாக்கம் (regeneration) செய்ய அனுமதிக்கிறது. இது செலவுமிக்க பழுதுகள் மற்றும் திட்டமிடப்படாத இயங்கா நேரத்தின் ஆபத்தைக் குறைத்து, தடையற்ற வாகனச் செயல்பாட்டை உறுதி செய்கிறது.

டிஸ்டன்ஸ்-டூ-எம்டி கண்காணிப்பு (Distance-to-Empty – DTE Monitoring)

ஒருங்கிணைக்கப்பட்ட DTE அம்சம், டீசல் மற்றும் ஆட்ப்ளூ (AdBlue) இரண்டிற்கும் மீதமுள்ள பயண வரம்பைப் பற்றிய துல்லியமான தகவலை வழங்குகிறது. இது ஓட்டுநர்கள் மற்றும் வாகன இயக்குநர்கள் எரிபொருள் நிரப்பும் நிறுத்தங்களை மிகவும் திறமையாகத் திட்டமிடவும், செயல்பாட்டுத் தடைகளைக் குறைக்கவும் உதவுகிறது.

ஃபிளீட்சென்ஸ் அறிக்கைகள் (FleetSense Reports)

விரிவான ஃபிளீட்சென்ஸ் (FleetSense) அறிக்கைகள் வாகனப் பயன்பாடு, வாகனச் செயல்திறன் மற்றும் செயல்பாட்டுப் போக்குகள் பற்றிய மதிப்புமிக்க தகவல்களை வழங்குகின்றன. இது வாகன உரிமையாளர்களுக்கு வழிகளைச் சீரமைக்கவும், திறனை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும் அதிகாரம் அளிக்கிறது.

ஸ்கோர்மேக்ஸ் ஓட்டுநர் செயல்திறன் பகுப்பாய்வு (ScoreMAXX Driver Performance Analytics)

ஸ்கோர்மேக்ஸ் (ScoreMAXX), ஓட்டுநரின் நடத்தை மற்றும் வாகன இயக்கத்தைப் பகுப்பாய்வு செய்து விரிவான ஓட்டுநர் மதிப்பெண் அட்டைகளை (scorecards) உருவாக்குகிறது. இந்த அம்சம் வாகன உரிமையாளர்களுக்கு மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைக் கண்டறியவும், சிறந்த ஓட்டுநர் பழக்கங்களை ஊக்குவிக்கவும், வாகனங்கள் முழுவதும் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

டிரைவர் மானிட்டரிங் சிஸ்டம் – விருப்பத்தேர்வு (Driver Monitoring System – Optional)

டீலர் அளவில் விருப்பத்தேர்வாகப் பொருத்தப்படும் (optional dealer-fitment), 2-வழி கேமரா அடிப்படையிலான டிரைவர் மானிட்டரிங் சிஸ்டம், பாதுகாப்புச் சம்பவங்களுக்காகச் சாலையைக் கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பை உயர்த்துகிறது. அதே நேரத்தில், கேமரா அடிப்படையிலான ஓட்டுநர் அங்கீகாரம், சீட்பெல்ட் பயன்பாடு மற்றும் ஓட்டுநரின் சோர்வு அல்லது தூக்கத்தின் அறிகுறிகளைக் கண்டறிதல் போன்ற அம்சங்களை வழங்கி, சரியான நேரத்தில் திருத்தும் நடவடிக்கைகளை எடுக்கவும், பாதுகாப்பான வாகன இயக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

COMFiMAXX சஸ்பென்டட் சீட்

வடிவமைப்பியல் முறைப்படி (ergonomically) உருவாக்கப்பட்ட, மூன்று வழிகளில் சரிசெய்யக்கூடிய இந்த சஸ்பென்டட் சீட், அதிர்வுகள் மற்றும் சாலை குலுக்கல்களைக் கணிசமாகக் குறைப்பதோடு, ஓட்டுநரின் எடைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது. இதன் விளைவாக, நீண்ட நேரம் வாகனம் ஓட்டும்போது சோர்வு குறைந்து, உடல் நிலை சீராகி, கூடுதல் சௌகரியம் கிடைக்கிறது. இது ஓட்டுநர்கள் நீண்ட தூரப் பயணங்களின் போதும் திறம்படச் செயல்பட உதவுகிறது.

ஈஸிக்ரூஸ் க்ரூஸ் கண்ட்ரோல்

ஈஸிக்ரூஸ் (EzyCruise) அமைப்பு, ஆக்ஸிலரேட்டரை தொடர்ந்து அழுத்த வேண்டிய தேவையின்றி சீரான வேகத்தைப் பராமரிக்கிறது. இது நெடுஞ்சாலைப் பயணங்களை மிகவும் சௌகரியமாக்குவதுடன், கட்டுப்பாடான எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்து சிறந்த சிக்கனத்தையும் அளிக்கிறது. இது ஓட்டுநரின் சோர்வைக் குறைத்து, நீண்ட தூர இயக்கங்களைச் சீராக்குகிறது. பிற போட்டி வாகனங்களைப் போலல்லாமல், ஈஸிக்ரூஸ் அமைப்பானது டேஷ்போர்டில் பொருத்தப்பட்ட எளிமையான பட்டன்கள் மூலம் எளிதாக இயக்கப்படுவதால், அடிக்கடிப் பயன்படுத்தவும் வசதியாகவும் இருக்கிறது.

ஹெவி டியூட்டி 430 மி.மீ கிளட்ச்

தேய்மானத்தைக் காட்டும் ஒருங்கிணைக்கப்பட்ட குறியீட்டுடன் (wear indicator) கூடிய பெரிய கிளட்ச், சீரான டார்க் பரிமாற்றம், சிறந்த வெப்ப வெளித்தள்ளல் மற்றும் நீண்ட கிளட்ச் ஆயுளை வழங்குகிறது. இந்த வடிவமைப்பு பராமரிப்புத் தேவைகளைக் குறைப்பதோடு, கியர் மாற்றும் சிரமத்தையும் குறைத்து, அதிக இயங்கு நேரம் (uptime) மற்றும் குறைந்த ஆயுட்காலச் செலவுக்குப் பங்களிக்கிறது. இது அனைத்து 9-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மாடல்களிலும் கிடைக்கிறது.

தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட ஏசி கேபின் மற்றும் என்டர்டெயின்மென்ட் சிஸ்டம்

BLAZO i-TRK வாகனத்தில் மிகவும் விசாலமான மற்றும் சௌகரியமான ஏசி கேபினுடன், ப்ளூடூத் இணைப்பு, FM/AM ரேடியோ, USB சார்ஜிங், AUX ஆதரவு மற்றும் கைகளைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாகப் பேசுவதற்கான (handsfree) பிரத்யேக மைக் ஆகியவற்றை வழங்கும் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட மியூசிக் சிஸ்டமும் உள்ளது. இது நீண்ட தூரப் பயணங்களின் போது மிகவும் இனிமையான மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் சூழலை உருவாக்குகிறது.

NOW 24×7 மொபைல் செயலி

BLAZO i-TRK சுற்றுச்சூழல் அமைப்பானது வாகனத்தையும் தாண்டி, மஹிந்திராவின் மேம்படுத்தப்பட்ட ‘NOW 24×7’ மொபைல் செயலியின் மூலம் நீடிக்கிறது. இது வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்காக எப்போதும் மஹிந்திராவுடன் இணைந்திருக்க உதவுகிறது.

இந்தச் செயலி வாடிக்கையாளர்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குகிறது.

● சேவைக் கோரிக்கைகளை (service requests) எழுப்பவும் கண்காணிக்கவும்

● சேவைக்கான முன்பதிவுகளைச் (service appointments) செய்ய

● முழுமையான வாகனச் சேவை வரலாற்றை (service history) அணுக

● சாலை ஓர உதவிகளைக் (roadside assistance) கோர

● உதிரிபாகங்களை (spare parts) ஆர்டர் செய்ய

● பிரேக்டவுன் வாகனத்தின் நேரடி இருப்பிடத்தைக் (live breakdown van location) கண்காணிக்க

● டிஜிட்டல் ஒப்புதல்கள் மற்றும் சேவை இமேஜ்களைப் (digital approvals and service updates) பார்க்க

சேவை, பராமரிப்பு மற்றும் வாகனக் கண்காணிப்பு ஆகியவற்றை ஒரே டிஜிட்டல் தளத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம், இந்தச் செயலியானது விரைவான செயல்பாட்டையும், செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் அதே வேளையில், ஃபிளீட் மேலாண்மையை (fleet management) மிகவும் எளிமையாக்குகிறது.

ஏரோகிட் பயன்பாட்டிற்கு ஏற்ற வடிவமைப்பு

BLAZO i-TRK வாகனமானது, பயன்பாட்டில் இருக்கும்போதே ஏரோ கிட்டை (Aero Kit) எளிதாகப் பொருத்தும் வகையிலான தொழிற்சாலை அமைப்புகளைக் கொண்டுள்ளது. இது சிறந்த ஏரோடைனமிக்ஸ் (காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் திறன்) மூலம் எரிபொருள் சிக்கனத்தை மேலும் மேம்படுத்த உதவுகிறது.

இது பொருத்தப்படுவதை எளிமையாக்குவது மட்டுமின்றி, வழக்கமான சந்தை மாற்றங்களால் (aftermarket modifications) ஏற்படும் கேபின் கசிவுகள், துருப்பிடித்தல் மற்றும் கட்டமைப்புச் சேதங்களைத் தடுக்கிறது. இதன் மூலம் சிறந்த ஏரோடைனமிக் செயல்திறனை அளிப்பதோடு, நீண்ட கால ஆயுளையும் உறுதி செய்கிறது.

அதிகமாகச் சம்பாதிக்கலாம் (Earn More), அதிகமாக இயக்கலாம் (Run More) மற்றும் அதிகமாகக் கட்டுப்படுத்தலாம் (Control More) என்ற மையக் கருத்துக்களைக் கொண்ட தனது விரிவான வாக்குறுதியின் மூலம், BLAZO i-TRK அதிக லாபம், சிறந்த நம்பகத்தன்மை மற்றும் அதிநவீன ஃபிளீட் மேலாண்மையை விரும்பும் டிரான்ஸ்போர்ட்டர்களுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய மதிப்பை வழங்குகிறது. மஹிந்திராவின் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட சேவை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தொழில்துறையில் முன்னணியில் உள்ள ஆப்டைம் கேரண்டி திட்டங்களின் ஆதரவுடன், BLAZO i-TRK இந்தியாவின் ஹெவி கமர்ஷியல் வாகனத் துறையின் வணிகச் செயல்பாட்டை மறுவரையறை செய்ய உருவாக்கப்பட்டுள்ளது.