cricket – Chennaionline

3 உலக சாதனைகள் படைத்த விராட் கோலி!
கர்நாடாக மாநிலம், பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் 18வது ஐபில் கிரிக்கெட் போட்டி நேற்று (ஏப்ரல் 24) இரவு நடைபெற்றது. இந்த 34வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 265 ரன்களைக் குவித்தது. ஐபிஎல் போட்டியில் 3 சதங்களை அடித்துள்ள சாய் சுதர்சன், இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்களைக் கடந்த கிரிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.

இதன்பின் விளையாடிய பெங்களூரு அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் விராட் கோலி 44 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். படிக்கல் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார்.

இந்த ஆட்டத்தில் 8 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசிய விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓர் அணிக்காக 300 சிக்சர் மற்றும் 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என சாதனையைப் படைத்தார். அத்துடன் ஒரே நாட்டில் விளையாடி டி20 போட்டிகளில் 10,000 ரன்களைக் குவித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற இமாலய சாதனையைப் படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ரோஹித் சர்மா 8563 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் 2026 – சி.எஸ்.கே, பஞ்சாப் கிங்ஸ் இன்று மோதல்
19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

கவுகாத்தியில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போதைய போட்டியில் வெற்றி பெற்று வெற்றி கணக்கை தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பஞ்சாப் கிங்ஸ் அணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்ற அந்த அணி வெற்றி கணக்கை தொடரும் முனைப்பில் இருக்கும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இரு அணியும் தலா 16 வெற்றி பெற்றுள்ளன. அதே சமயம், சென்னையில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் 4 போட்டிகளில் சென்னையும், 5 போட்டிகளில் பஞ்சாப் அணியும் வெற்றி பெற்றுள்ளன.

அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!
வரும் ஜூன் மாதம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 26 ஆம் தேதி, முதல் டி20 போட்டியும், ஜூன் 28 ஆம் தேதி 2 வது டி20 போட்டியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி – இந்தியா, நியூசிலாந்து இன்று மோதல்
இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை இணைந்து நடத்தும் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, சொந்த மண்ணில் மீண்டும் கோப்பையை வென்று சாதனை படைக்கக் காத்திருக்கிறது. அதாவது, தொடர்ந்து இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லும் முதல் அணி என்பதோடு 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபியை தொடர்ந்து மூன்றாவது ஐசிசி கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற இந்தியா போராடும்.

மறுபுறம் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி, தனது முதல் டி20 உலகக் கோப்பையைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் பின் ஆலன் 33 பந்துகளில் சதமடித்து மிரட்டியிருப்பதால், இறுதிப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.

முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று காஷ்மீர் அணி சாதனை!
ரஞ்சி கோப்பை பைனல் கர்நாடகா- ஜம்மு-காஷ்மீர் இடையே ஹூப்ளியில் நேற்று நடைபெற்றது. கடந்த 24-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு-காஷ்மீர் பேட்டிங் தேர்வு செய்தது. ஷுபம் பண்டிர் (121), யாவெர் ஹசன் (88), பராஸ் டோக்ரா (70), அப்துல் சமாத் (61), கணையா வதாமேன் (70), சஹில் லோத்ரா (72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் ஜம்மு-காஷ்மீர் 584 ரன்கள் குவித்தது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகாவை 293 ரன்னில் சுருட்டியது. மயங்க் அகர்வால் அதிகபட்சமாக 160 ரன்கள் சேர்த்தார். ஜம்மு-காஷ்மீர் அணியின் அகிப் நபி 5 விக்கெட்டுகள் சாய்த்தார். 291 ரன்கள் முன்னிலையுடன் ஜம்மு-காஷ்மீர் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 2-வது இன்னிங்சிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் தொடக்க வீரர் இக்பால் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் அடிக்க, ஜம்மு-காஷ்மீர் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. 477 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், இன்று கடைசி ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்தது. இக்பால் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.

மற்றொரு முனையில் சஹில் லோத்ராவும் சதம் விளாசினார். 4 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இக்பால் 160 ரன்களுடனும், லோத்ரா 101 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மொத்தமாக 633 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், 634 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்கோரை கர்நாடகா அணியால் எட்டுவது மிகவும் கடினம். எனவே, போட்டியை அத்துடன் முடித்துக் கொள்ள இரு அணி கேப்டன்களும் முடிவு செய்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஜம்மு-காஷ்மீர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ள ஜம்மு காஷ்மீர் அணிக்கு ரூ.2 கோடி ரொக்கப்பரிசு வழங்குவதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். முன்னதாக, நேற்று காலை அவர் நடைபெற்ற மைதானத்துக்கு சென்று வீரர்களை உமர் அப்துல்லா உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே பிரதமர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள வாழ்த்து பதிவில், ரஞ்சி கோப்பையை முதன்முறையாக வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு வாழ்த்துக்கள்! இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி அணியின் குறிப்பிடத்தக்க மன உறுதி, ஒழுக்கம் மற்றும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ஒரு பெருமையான தருணம், மேலும் இது அங்கு வளர்ந்து வரும் விளையாட்டு ஆர்வத்தையும் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த சாதனை பல இளம் விளையாட்டு வீரர்களை பெரிய கனவுகள் காணவும் மேலும் விளையாடவும் ஊக்குவிக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வதாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.

நடப்பு சாம்பியனான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. லீக் ஆட்டங்களில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வென்ற பிறகு சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. சென்னையில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரில் இருந்து வெளியேறும். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆட வேண்டும். இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் இந்திய அணி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். ஏனெனில், வெஸ்ட் இண்டீசைவிட நிகர ரன் ரேட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது.

இந்திய அணியில் அபிஷேக் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். இஷான் கிஷன் (214 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (213), ஷிவம் துபே (158), ஹர்திக் பாண்ட்யா (155), திலக் வர்மா (151) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள். ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை. வேகப்பந்தில் அர்ஷ்தீப் சிங், பும்ராவும் சுழற்பந்தில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஹெட்மயர், கேப்டன் ஷாய் ஹோப், ரூதர்போர்டு, போவெல் ஆகியோர் பேட்டிங்கிலும், குடாகேஷ், ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவை போலவே வெஸ்ட்இண்டீஸ் அணியும் லீக் சுற்றில் தோல்வியை தழுவாமல் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

இன்று மாலை 3 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று – இன்று இலங்கை, பாகிஸ்தான் மோதல்
20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன் இலக்கை கூட நெருங்க முடியாமல் 95 ரன்னில் சுருண்டு போனது. முக்கியமான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சறுக்கலை சந்தித்து இருக்கிறது. இனி உள்ளூர் ரசிகர்கள் முன் ஆறுதல் வெற்றியோடு நிறைவு செய்ய முனைப்பு காட்டுவார்கள்.

முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு முடிவில்லை. ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக) என ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் பணிந்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது.

இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி கண்டு, ரன்ரேட்டிலும் நியூசிலாந்தை முந்தினால் அரைஇறுதி வாய்ப்பை பெற்று விடும். அதாவது முதலில் பேட் செய்தால் குறைந்தது 64 ரன் வித்தியாசத்திலோ அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 13.1 ஓவருக்குள் இலக்கை விரட்டிப் பிடித்தாலோ அரைஇறுதி அதிர்ஷ்டம் அடிக்கும். எனவே சுழற்பந்து வீச்சில் வலுவாக உள்ள பாகிஸ்தான் பேட்டிங்கிலும் அசத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

டி20 உலகக் கோப்பை தொடர் – சூப்பர் 8 சுற்றில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதல்
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை இன்று (22-ம் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 17 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

தென் ஆப்பிரிக்க அணியும் இந்தத் தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய அணி மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அவர் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம். அபிஷேக் சர்மா 2 முறை சுழற்பந்து வீரருக்கு டக் அவுட் ஆனார். எனவே தென் ஆப்பிரிக்காவும் அவரை உடனே வெளியேற்ற சுழற்பந்து வீச்சாளரை தொடக்கத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

பேட்டிங்கில் இஷான் கிஷன் (176 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (162), ஷிவம் துபே (116), திலக் வர்மா (106) ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி (9 விக்கெட்), அக்சர் படேல் (6), பும்ரா (4) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக சுழற்பந்து வீரருக்கு வாய்ப்பா அல்லது 3 வேகப்பந்து வீரரா என்பது ஆடுகள தன்மையை பொறுத்த முடிவாகும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா சமநிலையுடன் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மார்கிராம் (178 ரன்), ரிக்கெல்டன் (145), குயின்டன் டி காக் (118) ஆகியோரும், பந்துவீச்சில் நிகிடி (8 விக்கெட்), மார்கோ யான்சென் (7 விக்கெட்), ரபாடா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் – இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே வெற்றி
டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை – ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார். ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாம்பே 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஜிம்பாம்பே அணியை வெற்றி பெறவைத்தார்.

இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் – பாகிஸ்தான் பிரதமர் திட்டவட்டம்
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டு வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியின் கொல்கத்தா அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து வங்கதேச அணி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியது. தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நிராகரித்தது. வங்கதேசத்திற்கு பதிலாக ஸ்காட்லாந்து இடம்பெற்றது.

இந்த விவகாரத்தில் வங்கதேசத்திற்கு ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து இருந்தது. அதே நேரத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்தது.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது. புறக்கணிப்பு முடிவை கைவிடாவிட்டால் ஒளிபரப்பு நிறுவனம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்தது.

இந்தியாவுடன் விளையாட மறுப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.சி.சி. தெரிவித்தது.

இந்த நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மந்திரி சபை கூட்டத்தில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

20 ஓவர் உலகக் கோப்பை தொடர்பாக நாங்கள் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். இது விளையாட்டு களம் அரசியல் இருக்க கூடாது என்பதால் நாங்கள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம். விளையாட்டில் அரசியல் இருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் வங்க தேசத்துக்கு முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும். இது மிகவும் பொருத்தமான முடிவு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் நன்கு ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறினார்.