namma health 2026 – Chennaionline

‘நம்ம ஹெல்த் மெகா எக்ஸ்போ 2026’! – ‘இந்திய மருத்துவச் சங்கம் (IMA) – தாம்பரம்’ நடத்தும் மாபெரும் சுகாதார கண்காட்சி
தனது பொன்விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய மருத்துவச் சங்கத்தின் (IMA), தாம்பரம் கிளை’நம்ம ஹெல்த் மெகா எக்ஸ்போ 2026′ எனும் மூன்று நாள் மாபெரும் சுகாதாரக் கண்காட்சியை 2026 அக்டோபர் 17 முதல் 19 வரை மேற்கு தாம்பரத்தில் நடத்துகிறது. பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வையும், நல்வாழ்வையும் மேம்படுத்தும் நோக்கத்துடன், “ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற கருப்பொருளுடன் இக்கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியை தமிழ்நாடு அரசின் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. D. சரத்குமார் அவர்கள் திறந்து வைக்கிறார். இந்திய மருத்துவச் சங்கத்தின் (IMA) அகில இந்திய கௌரவ பொது செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் K. M. அபுல் ஹாசன் முன்னிலை வகிக்கிறார். இத்தொடக்கவிழா நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் டாக்டர் B. ஸ்ரீதர், தமிழ்நாடு மாநில கௌரவ செயலாளர் டாக்டர் எம். திரவியம் மோகன், காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் தலைவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் J. A. ஜெயலால் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் M. வீரப்பன், இ.ஆ.ப., ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இக்கண்காட்சியில் அடிப்படை மருத்துவ அறிவியல் முதல் நரம்பியல், மகப்பேறு மருத்துவம் மற்றும் இதயவியல் உள்ளிட்ட சிறப்பு மற்றும் அதிநவீன மருத்துவப் பிரிவுகள் வரை 26 பிரத்யேக அரங்கங்கள் இடம்பெற உள்ளன. குடும்பங்கள், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளும், உடல்நல பராமரிப்பு மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் நேரடி செயல் விளக்க நிகழ்வுகள் நாள் முழுவதும் நடைபெறும். தினமும் 8,000 முதல் 10,000 பேர் இக்கண்காட்சிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 மருத்துவக் கல்லூரிகள், ஏறக்குறைய 50 மருத்துவமனைகள் மற்றும் 300 முதல் 400 மருத்துவ நிபுணர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

நவராத்திரி கொலுவின் கலாச்சார மரபையும், மருத்துவம் மற்றும் சுகாதாரக் கருப்பொருளையும் தனித்துவமான முறையில் இணைத்து அமைக்கப்படும் 42 அடி உயர பிரம்மாண்டமான மருத்துவக் கொலு இக்கண்காட்சியில் இடம்பெறுகிறது. பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் சிறப்பம்சமான இது மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் – தாம்பரம் கிளையின் தலைவர் டாக்டர் எல். யசோதா இது குறித்து கூறுகையில், “பொதுமக்கள் தங்கள் உடல்நலனைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கிச் சரியான அடிகளை எடுத்துவைக்கவும் இக்கண்காட்சி ஒரு பயனுள்ள வாய்ப்பாக அமையும். இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால், ஹீமோகுளோபின் மற்றும் பிஎம்ஐ போன்ற அடிப்படை பரிசோதனைகளுடன், இரத்த சோகை மற்றும் கருத்தரிக்கும் வயதிலுள்ள பெண்களை பாதிக்கும் ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றக்கோளாறு (PCOS) குறித்த விழிப்புணர்வு அமர்வுகள் பார்வையாளர்களுக்கு அதிக பயனுள்ளதாக அமையும். இதயசுவாச மீட்பு கருவி மற்றும் தானியக்க வெளிப்புற இதயத் துடிப்பு சீராக்கி (AED) கருவிகளின் பயன்பாடு குறித்த நேரடி செய்முறை விளக்கங்கள், இதயசுவாச மீட்பு சிகிச்சை (சிபிஆர்) மீது பயிற்சி, மற்றும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் கால்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தாங்களே கண்டறியும் எளிய இரண்டு நிமிட சுய பரிசோதனை முறைகளும் இக்கண்காட்சியில் இடம்பெறுகின்றன,” என்றார்.

இக்கண்காட்சியில் இடம்பெறும் ஒவ்வொரு அரங்கமும் ஒரு குறிப்பிட்ட நோய், உடல் உறுப்பு அல்லது சுகாதாரப் பிரச்சனையை மையமாகக் கொண்டு, மருத்துவத் தகவல்களை எளிமையாகவும் அனைவருக்கும் புரியும் வகையிலும் வழங்கும். இதய நலம், நீரிழிவு, புற்றுநோய் விழிப்புணர்வு முதல் மனநலம், பெண்கள் நலம், தடுப்பூசிகள், அவசரகால சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு தானம் வரை பல்வேறு தலைப்புகளில், நோய்த் தடுப்பு முறைகளை ஊக்குவிக்கவும், தவறான மருத்துவப் யூகங்களை அகற்றவும், சிகிச்சை தொடர்பாக சரியான முடிவுகளை எடுக்க பொதுமக்களுக்கு திறன் வழங்கவும் உதவும் வகையில் இந்த அரங்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியின் அமைப்பாளர் டாக்டர் T. N. ரவிசங்கர் கூறுகையில், “மூன்று நாட்களும் சிறப்பு மருத்துவ உரைகள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் வினாடி-வினா நிகழ்ச்சிகள் வெவ்வேறு கருப்பொருள்களின் கீழ் நடைபெறும். முதல் நாளன்று நடைபெறும் ‘சமூகத்தின் இதயம்’ நிகழ்வில், இதய ஆரோக்கியம், நீரிழிவு, பக்கவாதம் மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் ஆகியவை மையப்படுத்தப்படும். இரண்டாம் நாள் அன்று ‘குடும்பம் மற்றும் எதிர்காலம்’ நிகழ்வில், பெண்களின் நலம், தாய்-சேய் ஊட்டச்சத்து, தடுப்பூசி, வளரிளம் பருவத்தினரின் மனநலம் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மூன்றாம் நாளான ‘பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு’ நிகழ்வில், முதலுதவி, அவசர சிகிச்சைகள், பாம்புக்கடி, விஷ பாதிப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (AMR) ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,” என்றார்.

இந்திய மருத்துவ சங்கம் – தாம்பரம் கிளையின் கௌரவச் செயலாளர் டாக்டர் வி.எஸ். ஹரிஹரன் கூறுகையில், “1976-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் தாம்பரம் கிளை 1,500 மருத்துவர்களை உறுப்பினர்களாக கொண்டு தனது 50-வது சேவை ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த ஆண்டுகளில், கண் பராமரிப்பு, பல் மருத்துவம், புற்றுநோய், நீரிழிவு என 40-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை எங்கள் சங்கம் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. இந்த பொன்விழா ஆண்டில், மருத்துவர்கள் – பொதுமக்களுக்கு இடையேயான சமூக உறவை வலுப்படுத்துவதும், நோய்த் தடுப்பு முறைகளை ஊக்குவிப்பதும், அனைத்து தரப்பு மக்களும் தரமான சுகாதார விழிப்புணர்வை எளிதில் பெறக்கூடியவாறு ஆக்குவதும் எங்களது முதன்மை குறிக்கோள்களாக இருக்கின்றன” என்றார்.

இந்த அமைப்பின் நிதி செயலாளர் டாக்டர் ஜி. புவனேஸ்வரி பேசுகையில், “இந்தக் கண்காட்சியைப் பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடலாம். பொம்மலாட்டம், ஜூம்பா மற்றும் யோகா பயிற்சிகள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு சுவாரஸ்யமாகவும் கலந்து செயல்படுதல் முறையிலும் வழங்கப்படும். அதிர்ஷ்டக் குலுக்கல்கள், பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், நீட் மற்றும் சார்ந்த மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் பிரத்யேக அரங்கம் ஆகியவையும் இக்கண்காட்சியின் பிற சிறப்பு அம்சங்களாகும். இந்த முன்னெடுப்புகள் வழியாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடையே ஊக்குவிக்கவும், இளைய சமுதாயத்தினருக்கு உத்வேகம் அளிக்கவும் நாங்கள் விரும்புகிறோம். அத்துடன், ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் விழிப்புணர்வின் மூலம் செழுமையான அனுபவத்தை வழங்குவதும் எமது நோக்கமாகும்,” என்றார்.

தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் கே.ஜி. அருண்ராஜ், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. என். ஆனந்த், மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. ராஜ்மோகன் ஆகியோரும் இக்கண்காட்சியில் பங்கேற்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.