small scale industry – Chennaionline

தமிழ்நாட்டின் ஜூன் 2026 நிலவரப்படி சிறு தொழில் முனைவோர் கடன் சந்தையில் நிலுவையில் உள்ள தொகை ரூ2.99 லட்சம் கோடியை எட்டியது!
ஜூன் 2026 நிலவரப்படி, தமிழ்நாட்டின் சிறு தொழில் முனைவோர் (MBE) கடன் சந்தையின் நிலுவைத் தொகை சுமார் ₹2.99 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதில் சிறு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களை விட, தனிநபர்கள் தொழில் தேவைகளுக்காக வாங்கும் கடன்கள் இரண்டு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், தனிநபர் தொழில் முனைவோரின் நிலுவைத் தொகை 20% கூட்டு ஆண்டுக் வளர்ச்சி வீதத்தில் (CAGR) அதிகரித்துள்ளது. அதேவேளையில், சிறு நிறுவனங்களின் நிலுவைத் தொகை 9% மட்டுமே உயர்ந்துள்ளது. இது தொழில்முனைவுச் செயல்பாடுகளுக்கு நிதி திரட்டுவதில் தனிநபர் கடன்களின் பங்கு அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது.

இந்த வளர்ச்சியானது, நிறுவன அளவிலான கடன் வாய்ப்புகளின் பிரம்மாண்டமான சாத்தியக்கூறுகள் மீதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 47.7 லட்சம் தனிநபர் தொழில் முனைவோர் இதுவரை நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கியதே இல்லை. இருப்பினும், அவர்களில் 65% பேர் வலுவான கடன் தகுதியைக் (Creditworthiness) கொண்டுள்ளனர். டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) மற்றும் தேசிய சிறு தொழில்கள் கழகம் (NSIC) இணைந்து நடத்திய “இந்தியாவில் சிறு தொழில் முனைவோர்கள்: வளர்ச்சி, மாற்றம் மற்றும் உருவெடுக்கும் வாய்ப்புகள்” என்ற ஆய்வின் முடிவுகள் இதனைத் தெரிவிக்கின்றன. கடன் வழங்கும் நிறுவனங்களின் கொள்கைகள், நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு, ஏற்கனவே வலுவான தனிநபர் கடன் வரலாற்றுப் பின்னணி கொண்ட தகுதியான தொழில் முனைவோருக்கு, கட்டமைப்பு சார்ந்த வணிகக் கடன்களை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான வாய்ப்புகளை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

தேசிய அளவில், ஜூன் 2026 நிலவரப்படி மொத்த வணிகக் கடன் சந்தையில் கிட்டத்தட்ட பாதியை, அதாவது ₹29.6 லட்சம் கோடி நிலுவைத் தொகையைச் சிறு தொழில் முனைவோர்கள் கொண்டுள்ளனர். இதில் ₹19.1 லட்சம் கோடி தொழில் தேவைகளுக்காக தனிநபர்கள் வாங்கிய கடனாகவும், ₹10.5 லட்சம் கோடி சிறு நிறுவனங்கள் வாங்கிய கடனாகவும் உள்ளது. நிறுவன அளவிலான கடன்கள் 12% கூட்டு ஆண்டுக் வளர்ச்சி வீதத்தில் (CAGR) உயர்ந்த நிலையில், தனிநபர் கடன் நிலுவைத் தொகை 21% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது நிறுவன அளவிலான கடன்களை விட, தொழில் தேவைகளுக்காக தனிநபர் பெயரில் பெறப்படும் கடன்கள் மிக வேகமாகக் விரிவடைந்து வருவதைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டின் தொழில்துறை பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் தொழில்முனைவோர் கடன் வளர்ச்சி

தமிழ்நாட்டின் சிறு தொழில் கடன் சூழலானது, மாநிலத்தின் பன்முகத்தன்மை கொண்ட தொழில்துறை தளத்தையும், பாதுகாக்கப்பட்ட வணிக நிதிக்கான (Secured Business Financing) வலுவான தேவையும் பிரதிபலிக்கிறது. சிறு நிறுவனங்களின் நிலுவைத் தொகையில் வர்த்தகத் துறை 34% பங்கைக் கொண்டுள்ளது; அதேவேளையில் உற்பத்தித் துறை 26% பங்களிப்பை வழங்குகிறது. இதில் பொறியியல் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

சொத்து பிணையக் கடன்கள் (Loans Against Property – LAP) 42% பங்களிப்புடன் சிறு தொழில் முனைவோர் கடன் சந்தையில் மிகப்பெரிய நிதி தயாரிப்பாகத் தொடர்கின்றன. அதேவேளையில், வர்த்தக வாகன நிதியுதவியும் (Commercial Vehicle Financing) தொழில்முனைவுச் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. மாநிலத்தின் தொழில்முனைவோர் சூழலமைப்பில் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் (NBFCs) முக்கிய பங்கை வெளிப்படுத்தும் வகையில், தனிநபர் வணிகக் கடன்களில் அவை 40%-க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன.

டிரான்ஸ்யூனியன் சிபில் நிறுவனத்தின் தலைமை வருவாய் அதிகாரி நிகில் ராஜத்யாக்க்ஷா கூறுகையில்: “தமிழ்நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட தொழில்துறை சூழலமைப்பானது, ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபட்ட நிதித் தேவைகளை உருவாக்குகிறது. இயந்திரங்களில் முதலீடு செய்யும் ஒரு உற்பத்தியாளர், கொள்முதல் சுழற்சிகளை (Procurement cycles) நிர்வகிக்கும் ஓர் உணவு பதப்படுத்தும் நிறுவனம் மற்றும் அன்றாட செயல்பாடுகளுக்கு நிதி திரட்டும் ஒரு வர்த்தகர் என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான கடன் தீர்வுகளே தேவைப்படுகின்றன. சொத்து பிணையக் கடன்கள் (Property-backed lending) வணிக நிதிக்கான ஒரு முக்கிய ஆதாரமாகத் திகழும் வேளையில், பணப்புழக்கம் சார்ந்த மதிப்பீடுகள் (Cash-flow-based assessments) மற்றும் நிறுவப்பட்ட கடன் வரலாற்றுப் பின்னணிகளை அதிகளவில் பயன்படுத்துவது, இந்த நிறுவனங்களின் நிதித் தேவைகளை கடன் வழங்குநர்கள் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும். கடன் வழங்குநர்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு, தகுதியான தொழில்முனைவோர்கள் தங்களது வணிகச் செயல்பாடுகளுக்கு ஏற்ற நிதியுதவியைப் பெற வழிவகை செய்வது, அவர்களின் முதலீடு செய்யும் திறன், வணிக விரிவாக்கம் மற்றும் நிலையான நிறுவனங்களை உருவாக்கும் ஆற்றலை வலுப்படுத்தும்.”

தேசிய சிறு தொழில் கழகத்தின் (NSIC) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மண்டலத் தலைவர் மற்றும் மூத்த பொது மேலாளர் திரு. எம். ஸ்ரீவத்சன் கூறியதாவது: “பொறியியல் மற்றும் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களால் தமிழ்நாட்டின் தொழில்முனைவோர் சூழலமைப்பு வலுவாகவும் பன்முகத்தன்மையுடனும் திகழ்கிறது. மாநிலத்தில் கணிசமான அளவிலான ‘விடுபட்ட நடுத்தரப் பிரிவினர்’ (Missing Middle) இருப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சுமார் 47.7 லட்சம் தனிநபர் தொழில்முனைவோர் இதுவரை நிறுவனங்களின் பெயரில் கடன் பெற்றதில்லை. இருப்பினும், அவர்களில் 65% பேர் வலுவான கடன் தகுதியைக் (Creditworthiness) கொண்டுள்ளனர். இந்தப் பிரிவினரை நிறுவன அளவிலான கடன் வசதிகளைப் பெறச் செய்வதன் மூலம், தகுதியுள்ள தொழில்முனைவோர் தங்களது வணிகத் தேவைகளுக்கு ஏற்ற நிதியுதவியைப் பெறவும், தங்களது தொழில்களை முறைப்படுத்தி வளர்க்கவும் உதவும். NSIC, MSME நிறுவனங்களுக்கு நிதியுதவி, சந்தை வாய்ப்புகளை மேம்படுத்துதல், அரசு கொள்முதலுக்கான பதிவு, மின்னணு வர்த்தக வசதிகளை ஊக்குவித்தல், ஏற்றுமதிச் சந்தைகளை அணுகுதல், திறன் மேம்பாட்டிற்கான மூலப்பொருள் கொள்முதல் மற்றும் விநியோக உதவி, MSME நிறுவனங்களுக்கான திறன் மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் பிற ஆதரவு சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், தொழில்முனைவோர் தங்களது வணிகங்களை வலுப்படுத்தி வளர்ச்சியடையச் செய்ய, TransUnion CIBIL போன்ற கூட்டாளர்கள் மற்றும் கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.”

தனிநபர் கடன்களுக்கும் நிறுவன அளவிலான கடன்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல்

இந்தியாவின் சிறு தொழில் முனைவோரில் (MBE) கணிசமான எண்ணிக்கையிலானோர் தனிநபர் பெயரில் கடன் வாங்கிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், முறையான வணிக நிறுவனங்களின் பெயரில் இன்னும் கடன் பெறாமல் உள்ளனர். மார்ச் 2026 நிலவரப்படி, இந்தியா முழுவதும் சுமார் 3.9 கோடி தனிநபர் வணிகக் கடன் வாடிக்கையாளர்கள் நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கியதே இல்லை. அவர்களில் 54% பேர் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வணிகக் கடன் அனுபவத்தைக் கொண்டுள்ளனர்; அதேவேளையில் 63% பேர் 730-க்கும் அதிகமான CIBIL ஸ்கோரைக் கொண்டுள்ளனர். இது நிறுவப்பட்ட கடன் பின்னணியைக் கொண்ட கடன் வாங்குவோரின் பெரிய எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகிறது.

கடன் வழங்கும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்களின் கடன் கொள்கைகள், கடன் மதிப்பீட்டு நிபந்தனைகள் (Underwriting criteria) மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு, தொழில் முனைவோரை தனிநபர் வணிகக் கடன்களிலிருந்து நிறுவன அளவிலான கடன்களுக்கு உயர்த்த ஆதரவளிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பை இது குறிக்கிறது. நடைமுறை மூலதன வசதிகள் (Working-capital facilities), ரொக்கக் கடன் (Cash credit) மற்றும் கணக்கு மிகைப்பற்று (Overdraft) தயாரிப்புகளுக்கான கூடுதல் வாய்ப்புகளை வழங்குவது, தொழில்கள் தங்களின் வளர்ந்து வரும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதோடு, பிணையமாகத் தங்கள் தனிப்பட்ட சொத்துக்களைச் சார்ந்திருப்பக் குறைக்கும்.

நிறுவன அளவிலான கடன் வாய்ப்புகளை மேலும் ஆழமாக்குவதற்கான தமிழ்நாட்டின் சாத்தியக்கூறுகளுக்கு, ஏற்கனவே கடன் வாங்கிய வரலாற்றுப் பின்னணி கொண்ட பெருமளவிலான தொழில் முனைவோரின் பங்களிப்பு உறுதுணையாக உள்ளது. மார்ச் 2026 நிலவரப்படி, சுமார் 47.7 லட்சம் தனிநபர் தொழில் முனைவோர் இதுவரை நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கியதே இல்லை. இருப்பினும், அவர்களில் 65% பேர் வலுவான கடன் தகுதியைக் (Creditworthiness) கொண்டுள்ளனர். ஜூன் 2026 நிலவரப்படி, தனிநபர் வணிகக் கடன் நிலுவைத் தொகையில் 53% பங்கானது பிரைம் பிரிவுக்கு மேல் உள்ள உயர் கடன் தகுதி (Above Prime) கொண்ட வாடிக்கையாளர்களிடம் உள்ளது. அதேவேளையில், கடன் திருப்பிச் செலுத்தும் திறன் கணிசமாக மேம்பட்டுள்ளது; 90 நாட்களுக்கு மேல் கடன் நிலுவை வைப்பது (90+ days delinquency) கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 141 அடிப்படை புள்ளிகள் (Basis points) குறைந்து 1.3%-ஆக மாறியுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான கடன் வாடிக்கையாளர்கள் மற்றும் மேம்பட்டு வரும் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகிய இரண்டின் சேர்க்கையானது, தகுதியான தொழில் முனைவோருக்கு நிறுவன அளவிலான நிதி வசதிகளை விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை வழங்குகிறது.

சிறு தொழில் கடன்களில் தொடர்ந்து முதன்மை வகிக்கும் பிணையக் கடன்கள்

இந்தியா முழுவதும் சிறு தொழில் முனைவோருக்கான (MBE) கடன்கள், பிணையங்கள் மற்றும் சொத்துக்கள் சார்ந்த நிதித் தயாரிப்புகளின் மூலமே பெரும்பான்மையாக வழங்கப்பட்டு வருகின்றன. ஜூன் 2026 நிலவரப்படி, சொத்து பிணையக் கடன்கள் (LAP) ₹10.9 லட்சம் கோடி நிலுவைத் தொகையுடன் மிகப்பெரிய கடன் பிரிவாகத் திகழ்கின்றன. அதற்கு அடுத்தபடியாக ரொக்கக் கடன் மற்றும் கணக்கு மிகைப்பற்று வசதிகள் (Cash credit and overdraft facilities) ₹5.6 லட்சம் கோடியிலும், வர்த்தக வாகனக் கடன்கள் ₹5.0 லட்சம் கோடியிலும் உள்ளன. இந்த நிதி மாதிரிகள், வணிகக் கடன்களுக்கு பிணையங்கள் இன்னமும் எவ்வளவு முக்கியமாக இருக்கின்றன என்பதைப் பிரதிபலிப்பதோடு, பணப்புழக்கம் சார்ந்த மற்றும் நடைமுறை மூலதனம் சார்ந்த கடன்களை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டுகின்றன.

சிறு தொழில் கடன்களின் விரிவாக்கத்துடன் சேர்ந்து, கடன் போர்ட்ஃபோலியோவின் தரமும் மேம்பட்டு வந்துள்ளது. ஒட்டுமொத்த கடன் நிலுவைத் தவறிய விகிதம் (Overall delinquency levels) ஜூன் 2023-இல் இருந்த சுமார் 3.0%-லிருந்து குறைந்து, ஜூன் 2026-இல் 1.9%-ஆக மாறிக் குறைந்திருக்கிறது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் கடன் வளர்ச்சிக்கு மத்தியில் வலுவான கடன் திருப்பிச் செலுத்தும் திறனைப் பிரதிபலிக்கிறது. கடன் வசதிகள் மேலும் எளிதாகக் கிடைக்கும் இந்தச் சூழலில், பல்வேறு தொழில் முனைவோர் பிரிவுகளின் கடன் தேவைகளையும் அவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனையும் புரிந்து கொள்வது, கடன் போர்ட்ஃபோலியோவின் உறுதித் தன்மையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முக்கியமாக இருக்கும்.

சிறு தொழில்களின் அடுத்த கட்ட வளர்ச்சியைச் சாத்தியப்படுத்துதல்

இந்தியாவின் தொழில்முனைவோர் சூழலமைப்பு விரிவடைந்து வரும் நிலையில், சிறு தொழில் கடன்களின் அடுத்த கட்ட வளர்ச்சியானது, தொழில்களை மிகவும் கட்டமைக்கப்பட்ட நிறுவன நிதி நிலையை நோக்கி முன்னேறச் செய்வதிலேயே அதிகளவில் தங்கியிருக்கும். பணப்புழக்கம் சார்ந்த கடன் மதிப்பீடு (Cash-flow-based underwriting), கடன் உத்தரவாத அமைப்புகள் (Credit guarantee mechanisms) மற்றும் டிஜிட்டல் நிதித் தகவல்கள் (Digital financial information) ஆகியவற்றை பரவலாகப் பயன்படுத்துவது, பாரம்பரிய சொத்து பிணைய முறைகளுக்கும் அப்பால் சாத்தியமுள்ள வணிகங்களைச் சரியாக மதிப்பீடு செய்ய கடன் வழங்குநர்களுக்கு உதவும்.

தனிநபர் வணிகக் கடன்களுக்கும் நிறுவன அளவிலான கடன்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது, வணிகங்கள் முறையான துறையாக (Formalisation) உருவெடுக்கவும், வணிக வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளுக்கு ஏற்ற நிதியுதவிகளை எளிதாகப் பெறவும், இந்தியா முழுவதிலும் உள்ள தொழில் முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.