star health – Chennaionline

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச Pneumococcal தடுப்பூசி முகாமை நடத்தியது ஸ்டார் ஹெல்த்!
இந்தியாவின் முன்னணி மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம் (NSE: STARHEALTH; BSE: 543412), எழும்பூரில் உள்ள அதன் ASK+ (ஆரோக்கிய சேவா கேந்திரா) சென்னை மையம் மூலம் இரண்டு நாள் Pneumococcal தடுப்பூசி முகாமை நடத்தியது. இந்த முகாம் மூலமாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். பெரியவர்களுக்கான தடுப்பூசி சேவைகளை எளிதில் கிடைக்கச் செய்வதையும், நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்த மருத்துவ பராமரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த இலவச முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் சீனியர் சிட்டிசன்கள் மற்றும் வயது வந்தோர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடி, தடுப்பூசி குறித்தும் மற்றும் சரியான நேரத்தில் தரப்படும் மருத்துவ நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ASK மையங்கள் மூலம் தடுப்புச் சுகாதாரச் சேவைகளை வலுப்படுத்துதல்

மருத்துவ சேவைகளை பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தின் CSR திட்டத்தின் ஒரு பகுதியாக – ஆரோக்கிய சேவா கேந்திரா (ASK) செயல்பட்டு வருகிறது. சென்னை எழும்பூரில் உள்ள ASK+ மையமானது, எழும்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகள், உடல் சார்ந்த பரிசோதனைகள், நீரிழிவு நோய் பரிசோதனை, நோய் கண்டறிதல் பரிசோதனைகள், மருந்துகள், சுகாதார ஆலோசனைகள் மற்றும் தடுப்பூசி உதவிகளை வழங்கி வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த சென்னை, கரூர், கோவில்பட்டி, நாகர்கோவில் மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ஐந்து மையங்கள் உட்பட 27 ASK மையங்களை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தற்போது இயக்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ASK மையங்கள் மூலம் இதுவரை 15,000-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்துள்ளனர்; இதில் ஆய்வகச் சேவைகளைப் பெற்ற சுமார் 8,000 பயனாளிகளும் அடங்குவர். இந்த மையங்கள் மூலம் இதுவரை சுமார் 22,000 பரிசோதனைகளும் 14,000 மருந்தகச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அகில இந்திய அளவில், ஸ்டார் ஹெல்தின் ASK மையங்கள் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த நெட்வொர்க் மூலம் 1.6 லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனைகளும் 1.4 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 78,000 பயனாளிகள் ஆய்வகச் சேவைகளைப் பெற்றுள்ளனர்.

இந்த முயற்சி குறித்துப் பேசிய ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு வணிகப் பிரிவுத் தலைவர் பாலாஜி பாபு சி கூறியதாவது: “பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளிலேயே அத்தியாவசியச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பெறும்போதுதான், நோய் தடுப்புச் சுகாதார கட்டமைப்பு முழுமையான பயனைத் தருகிறது. தமிழ்நாட்டில் உள்ள நமது ASK மையங்கள் மூலம் இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட நீரிழிவு நோய் தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன; இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளுக்கான சுமார் 11,000 தொற்றா நோய் (NCD) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன; மேலும் 750-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எங்களின் சென்னை ASK+ மையத்தில் நடைபெற்ற Pneumococcal தடுப்பூசி முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றிருப்பது, நோய் தடுப்புச் சுகாதாரம் மற்றும் சரியான நேரத்தில் ஆரோக்கியத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதை உணர்த்துகிறது. இத்தகைய பெரிய அளவிலான சமூக மருத்துவ மற்றும் தடுப்பூசி முகாம்கள் மூலம் இந்த முயற்சியை மேலும் முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதே வேளையில், தமிழ்நாட்டின் மேலும் பல மாவட்டங்களுக்கு இத்தகைய மருத்துவ மையங்களை விரிவுபடுத்தி, உள்ளூர் அளவில் நோய் தடுப்புச் சுகாதாரச் சேவைகள் எளிதில் கிடைப்பதை உறுதிசெய்வோம்.”

தடுப்பூசி முகாமைத் தொடர்ந்து, தனது ASK நெட்வொர்க் மூலம் நோய் தடுப்புச் சுகாதார முயற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் தடுப்பூசி முகாம்களைத் தொடர்ந்து கண்டறிந்து நடைமுறைப்படுத்தும் என்று ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது மருத்துவச் சேவைகளை மேலும் வலுப்படுத்தவும், தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் மருத்துவ விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் எளிதில் கிடைப்பதை மேம்படுத்தவும் பங்களிக்கத் திட்டமிட்டுள்ளது.