tamil news
கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு மழை எச்சரிக்கை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள பிபோர்ஜோய் புயல், அடுத்த 36 மணி நேரத்தில் மீண்டும் தீவிரம் அடைந்து வடகிழக்கு திசையிலும், அடுத்த 3 நாட்களில் வடமேற்கு திசையிலும் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவும் கேரளாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா உள்பட 8 மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
டுவிட்டரில் கிரியேட்டர்கள் பணம் சம்பாதிக்க புதிய வழி – எலான் மஸ்க் அறிவிப்பு
உலகின் முன்னணி சமூக வலைதளமான டுவிட்டர், விரைவில் கிரியேட்டர்களும் பணம் சம்பாதிக்க செய்யும் புதிய திட்டத்தை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதனை டுவிட்டரை விலைக்கு வாங்கியிருக்கும் எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார். டுவிட்டர் தளத்தில் கிரியேட்டர்கள் பதிவிடும் டுவிட்களில் விளம்பரங்களை வழங்கி, அதில் இருந்து கிடைக்கும் வருவாயை கிரியேட்டர்களுக்கு பங்கிட்டு கொடுக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக 5 மில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். "கிரியேட்டர் வெரிஃபைடு பெற்றிருக்க வேண்டும். மேலும் வெரிஃபைடு பயனர்களுக்கு மட்டுமே விளம்பரங்கள் வழங்கப்படும்," என்று எலான் மஸ்க் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க், அதில் ஏராளமான மாற்றங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார். அதன்படி டுவிட்டர் தளத்தில் பயனர்களுக்கு வெரிஃபைடு அந்தஸ்தை வழங்கும் வகையில் புளூ சந்தா அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கட்டணம் செலுத்துவோருக்கு வெரிஃபைடு அந்தஸ்த்து, கூடுதலாக புதிய வசதிகளை விரைந்து வழங்கி வருகிறது. Read More
அம்மாவுக்காக தாஜ்மஹால் வடிவில் நினைவு இல்லம் கட்டிய மகன்!
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் . இவரது மனைவி ஜெய்லானி பீவி. இவர்களுக்கு 4 மகள், 1 மகன் உள்ளனர். இவர் சென்னையில்… Read More
அதிதீவிர புயலாக உருவெடுத்த பிபோர்ஜோய் – 3 மாநிலங்களில் அதிகன மழை
அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இந்த அதிதீவிர புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து வடக்கு மற்றும் வடகிழக்கு… Read More
பணியின் போது ரெயில் என்ஜின் ஒட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை
ஒடிசா ரெயில் விபத்தில் 288 பயணிகள் பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தெற்கு ரெயில்வேயில் மதுரை கோட்டத்தில் பணியின் போது ரெயில் என்ஜின் டிரைவர்கள் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதித்து அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே வட்டாரத்தினர் கூறியதாவது:- தற்போது 'ஸ்மார்ட் வாட்ச்' பயன்பாடு அதிகரித்துள்ளதால் 'புளூ டூத்' மூலம் வாட்சில் கனெக்ஷன் ஏற்படுவதால் அதில் அழைப்புகள் வந்தால் தெரிந்துவிடும். மேலும் சில 'ஸ்மார்ட் வாட்ச்'கள் 'போர்ட்டபிள் மீடியா பிளேயர்'களாக செயல்படுகின்றன. எப்.எம். ரேடியோ மற்றும் புளூடூத் ஹெட்செட் வழியாக டிஜிட்டல் ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை இயக்குகின்றன. இதனால் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிந்து பணியாற்றுகிற போது இதுபோன்ற காரணங்களால் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ரெயில் வேகமாக செல்லும்போது கவன சிதறல் ஏற்பட்டால் விபரீதமாகிவிடும். அதனால் இந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு சென்னை கோட்டத்திலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இனி அடுத்தடுத்து நடைமுறைப்படுத்துவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். Read More
மகாராஷ்டிரா அமைச்சரவையில் 4 முக்கிய அமைச்சர்களை நீக்க உத்தரவிட்ட அமித்ஷா? – சஞ்சய் ராவத் தகவல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை கைப்பற்றி, பா.ஜனதா துணையுடன் ஏக்நாக் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். அவருடைய கட்சியனருக்கும் உத்தவ் தாக்கரே கட்சியினருக்கும் இடையில் கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. பா.ஜனதாவின் பட்நாவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். மகாராஷ்டிரா மாநில மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சலசலப்பு ஏற்படும் என உத்தவ் தாக்கரே கட்சியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, சிவசேனாவின் நான்கு முக்கிய மந்திரிகளை நீக்குமாறு ஏக்நாத் ஷிண்டேயிடம் கேட்டுக்கொண்டதாக ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சஞ்சய் ராவத் கூறுகையில் ''மந்திரிசபை மாற்றம் குறித்து அமித் ஷா சில தகவல்களை ஷிண்டேவிடம் தெரிவித்துள்ளார். விரிவாக்கம் அதன்படி நடைபெற்றால் ஷிண்டே, அவரது முக்கியமான நான்கு மந்திரிகளை நீக்க வேண்டியிருக்கும். இது என்னுடைய தகவல்'' எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷிண்டேவின் சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஷிர்சத் கூறுகையில் ''மற்றவர்கள் விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் அவருடைய பழக்கமாக இது இருக்கலாம்'' என குறிப்பிட்டார். ஒருவேளை முக்கிய மந்திரிகள் நீக்கப்பட்டால் சலசலப்பு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலின்போது உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, பாஜனதா கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு தேவையான இடங்களை விட அதிகமான இடங்களை இந்தக் கூட்டணி பிடித்தது. என்றாலும், முதல் பதவி வேண்டும் என உத்தவ் தாக்கரே அடம் பிடித்ததால் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைத்தது. பின்னர் சிவசேனா கட்சியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சிவசேனா கட்சியை கைப்பற்றி முதல்வர் பதவியையும் பெற்றுக்கொண்டார். Read More
ஈரான் உதவியுடன் டிரோன் தொழிற்சாலை அமைக்கும் ரஷ்யா
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. முதலில் உக்ரைனை எளிதாக வீழ்த்திவிடலாம் என ரஷியா நினைத்தது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மிகப்பெரிய அளவில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கியதால் உக்ரைன் எதிர்த்து போரிட்டு வருகிறது. மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தவில்லை என்றாலும் தற்பாதுகாப்பை மிகப்பெரிய அளவில் செய்து வருகிறது. இதனால் ரஷியாவால் உக்ரைனின் பெரும்பகுதியை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் உள்ளது. தற்போது இரு பக்கத்தில் இருந்தம் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்றுகூட இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள ரஷியப் பகுதியில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் டிரோன்கள், தாக்குதலுக்கு மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் ஈரான் உதவியுடன் ரஷியா டிரோன் தொழிற்சாலை கட்டிவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் டிரோன் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உபகரணங்களை ஈரான் வழங்கி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, உளவுத்துறை மூலம் இந்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர், ரஷியாவின் அலபுகா சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருந்து அடுத்த வருடம் இந்த தொழிற்சாலை இயக்கத்திற்கு வரும் என புலனாய்வுத்துறை அதிகாரிகள் நம்புவதாக தெரிவித்துள்ளார். மாஸ்கோவின் கிழக்குப் பகுதியில் அநேகமாக கட்டப்பட இருக்கும் இடம் இதுவாகத்தான், ஒரு இடத்தின் படத்தையும் வெளியிட்டுள்ளது. உக்ரைன் போருக்காக ஈரான்- ரஷியா டிரோன் தயாரிப்பில் ஈடுபடலாம் என கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிந்தார். ஆனால், உக்ரைன் மீதான போர் தொடங்குவதற்கு முன் ரஷியாவுக்கு டிரோன் வழங்கி கொண்டிருந்தோம். ஆனால் தற்போது வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. ஆனால் ஈரான் தொடர்ந்து ரஷியாவுக்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட டிரோன்களை வழங்கி வருகிறது. இந்த டிரோன்கள் ஈரானின் அமிராபாத்தில் இருந்து ரஷியாவின் மகாச்கலா என்ற இடத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அதன்பிறகு உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. Read More
எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன். கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருந்தபோது நாடு தழுவிய ஊரடங்கு இங்கிலாந்தில் பிறப்பிக்கப்பட்டது. அப்போது இவர் தனது அலுவலகத்தில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னும் அந்த பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. அவர் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினாரா? என்பது குறித்து விசாரணை நடத்த சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒருவேளை அவர் தவறாக பயன்படுத்தினார் என இந்தக்குழு அறிக்கை தாக்கல் செய்தால், நாடாளுமன்றத்தில் இருந்து 10 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவார். இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற்ற இருக்கிறது. ''நாடாளுமன்றத்தில் விட்டு வெளியேறுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. அதுவும் தற்போதை நிலையில்... சிலருடைய குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரம் இல்லாமலும், குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்ளின் ஒப்புதல் கூட இல்லாமலும் சிலரால் நான் கட்டாயப்படுத்தப்படுகிறேன். விசாரணைக்குழுவிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் என்ன வியப்பு என்றால், என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்துவதில் உறுதியாக இருந்தனர் என்பது தெரியவந்தது'' என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். Read More
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 8ம் தேதி சென்னை வருவதாக இருந்தது. தற்போது அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து இன்று இரவு சென்னைக்கு புறப்படுகிறார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா குறி வைத்துள்ள தொகுதிகளில் தென் சென்னை தொகுதியும் ஒன்று. அதற்கு காரணம் பா.ஜனதா தனித்து போட்டியிட்டே இந்த தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று உள்ளது. எனவே இந்த தொகுதியில் தனிக்கவனம் செலுத்துகிறது. வருகிற தேர்தலில் இந்த தொகுதியை கைப்பற்ற பா.ஜனதாவினருக்கு அமித்ஷா வியூகம் அமைத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது. தொகுதியில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் அவர் ஆலோசனை வழங்குவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர் சென்னை நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் சென்னை விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வேலூர் புறப்பட்டு செல்கிறார். வேலூரில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார். Read More
நவி மும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட முடிவு
விமான போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு நவி மும்பையில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட உள்ளது. புதிய விமான நிலையம் நவி மும்பையில் உள்ள உல்வேயில் மும்பை பெருநகரப் பகுதியின் மையத்தில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டர்களில் ஒன்றான அதானி விமான நிலையத்தால் இந்த விமான நிலையம் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக கட்டப்படவுள்ள இந்த விமான நிலையத்தை உலகின் மிகவும் ஆற்றல் திறன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நிலையான வகையில் மாற்றும் திட்டம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும். விமான நிலையம் முழுவதும் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்படும். இது பசுமை மின்சாரத்தையும் பரவலாகப் பயன்படுத்தும், அதில் பெரும்பகுதி சூரிய சக்தியை தளத்தில் உற்பத்தி செய்யும் என்று திட்டத்தை நிர்வகிக்கும் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தேசிய மலரான தாமரையால் ஈர்க்கப்பட்டு முனையம் வடிவமைக்கப்படுகிறது. நவி மும்பையில் 1160 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்படும் சர்வதேச விமான நிலையம் முதல் இரண்டு கட்டங்கள் டிசம்பர் 2024க்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணைத் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் இணைந்து, விமான நிலைய பணிகளை நேற்று ஆய்வு செய்தார். தளத்தில் வான்வழி ஆய்வுக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் விமான நிலையத்தின் அம்சங்கள் குறித்து விரிவான விளக்கத்தை அளித்தனர். புதிய விமான நிலையம் மகாராஷ்டிராவுக்கு மட்டுமல்ல, நாட்டிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்றும் மும்பை விமான நிலையத்தின் நெரிசலை குறைக்கும் என்று முதல்வர் கூறினார். Read More