TVK Vijay – Chennaionline

இரண்டாவது முறையாக இன்று ஆளுநரை சந்தித்த த.வெ.க தலைவர் விஜய்
த.வெ.க 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் சில இடங்கள் தேவைப்படுவதால், இதுவரை ஆளுநர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள விஜய், இன்று மீண்டும் ஆளுநரைச் சந்தித்துத் தனது தரப்பு விளக்கங்களை முன்வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திடீர் திருப்பத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, விரைவில் பதவி ஏற்பு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் தொண்டர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு – விசாரணைக்கு நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். மேலும் இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்தை இன்று மறுதணிக்கை செய்யப்படும் என அறிவித்த நிலையில், கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் படம் பார்ப்பது ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என அழுத்தம் தரப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கரூர் வழக்கிற்காக நாளை சி.பி.ஐ. முன் விஜய் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் அரசியல் அழுத்தமே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம் – விஜய் அறிக்கை
த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,

வணக்கம்.

நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள்.

ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.

2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம்.

நல்லதே நடக்கும்.

வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

த.வெ.க வழங்கிய ரூ.20 லட்சத்தை மருமகன் வீணாக்கி வருகிறார் – மாமியார் பரபரப்பு புகார்
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், விஜய் கொடுத்த ரூ. 20 லட்சத்தை தனது மருமகன் வீணாக்கி வருவதாக மாமியார் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “3 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகளுக்கு திருமணம் நடைபெற்றது. அவளுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணமான ஒரு வருடத்திலேயே எனது மகள் கணவனுடன் வாழாமல் என வீட்டிற்கு வந்துவிட்டாள். இப்போது விஜய் கூட்டத்தில் என் மகள் உயிரிழந்தார். அப்போது கூட என் மகளின் சடலத்தை பார்க்க வராத என் மருமகன், இழப்பீடு பணம் அறிவித்தவுடன் மருத்துவமனையில் வந்து சண்டையிட்டு சடலத்தை வாங்கி அடக்கம் செய்ததோடு மகளையும் தன்னோடு அழைத்து சென்றார்.

இப்போது ரூ.20 லட்சம் பணம் வாங்கியவுடன் வேறு மாதிரி நடந்து கொள்கிரார். ஆகையால் என் மகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யவேண்டும். அதற்கு அவரையும் என்னையும் நாமினியாக நியமிக்க வேண்டும். அப்போது தான் என் பேத்தியின் எதிர்காலம் பாதுகாக்கப்படும். அனால் அந்த பணத்தை என் விருப்பப்படி தான் செலவு செய்வேன் என்று எகத்தாளமாக பேசுகிறார்” என்று அழுதபடியே தெரிவித்தார்.

வாக்களர் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்
மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்பு தீவிரத் திருத்தம் என்று தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம்.

அப்போது எச்சரித்தது போலவே பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.

முதல் கட்டச் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்டத் திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்? தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?

இந்த வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் வாயிலாக. பீகாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறி வைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது.

எனவே சிறப்புத் தீவிரத் திருத்தம் என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து. ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. மேலும் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சில ஆலோசனைகளை முன்வைக்கிறது.

1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.

2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.

3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்திற்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.

4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகளின் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.

6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில், எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்.

நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க, அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதே சமயம், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.

அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் தி.மு.க., இதுகுறித்துச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?

தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு, அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்துகொண்டு, மக்கள் உரிமைகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தோம். ஆனால், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை.

தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க.வின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், தி.மு.க. அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களைத் திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும். சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக ஏற்கெனவே தமிழ்நாட்டில் முதல் குரலாக ஓங்கி ஒலித்தது, தமிழக வெற்றிக் கழகத்தின் குரல்தான். இதை நாடும் நாட்டு மக்களும் நன்றாகவே அறிவர். நாம் முதன்முதலாகக் குரல் எழுப்பிய அந்த நேரத்தில் தி.மு.க.

தூங்கிக்கொண்டிருந்ததா? ஒன்றிய பா.ஜ.க.வுடன் மறைமுக உறவுக்காரராக இருந்ததால் மறதி மயக்கத்தில் இருந்ததா? ஏதோ இப்போது மட்டும் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக முதன்முதலாக விழித்துக்கொண்டது போலவும், தான் மட்டுமே ஜனநாயக உரிமையின் ஒற்றைப் பாதுகாவலன் போலவும் கபட நாடக வேடத்தைப் பூண்டுள்ளது, அப்பட்டமான ஏமாற்று வேலை. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் கூட்டணிக் கட்சிகளை ஏமாற்றுவதைப் போல எல்லோரையும் ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க. நினைக்கிறதா? இந்தக் கேள்விகள் மக்கள் மனத்திலும் எழுந்துள்ளன. எனவே, தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

ஜனநாயகத்திற்காகவும் மக்கள் உரிமைகளுக்காகவும் காத்திரமாகக் குரல் கொடுப்பதில் தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் முதல் இயக்கமாக இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர். ஜனநாயக மற்றும் மக்கள் உரிமைகளுக்கு எதிராகச் செயல்பட்டால், அது ஒன்றிய பா.ஜ.க. அரசாக இருந்தாலும் அல்லது வேறு யாராக இருந்தாலும், சமரசமின்றி எதிர்ப்பதில் த.வெ.க. எப்போதும் போல் தீர்க்கமாக இருக்கும்.

ஆகவே, சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும் முகாம்கள் நடத்தப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, வட்ட, பகுதி, கிளை நிர்வாகிகள் என அனைவரும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை விழிப்போடு கண்காணிப்பர்.

மக்கள் நலன், ஜனநாயகம் மற்றும் உரிமைகள் சார்ந்த அனைத்திலும் மக்களுடன் மக்களாக, மக்கள் பக்கம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தை நாட த.வெ.க முடிவு – அவசர கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கிய இந்த சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் தான் காரணம் என்று பல்வேறு கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

த.வெ.க. உள்பட மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த கூடாது என்று உத்தரவிட்டனர். அதோடு த.வெ.க. தலைவர் விஜய்யை கண்டித்து பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு கூடுதல் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் அந்த மனுவுக்கு தமிழக அரசும், விஜய்யும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்து இருந்த மனுக்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பிறகு நீதிபதிகள் அவர்கள் இருவருக்கும் முன்ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், “கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அவர்கள் இருவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்தை மீறியுள்ளனர். எனவே மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது” என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி செந்தில்குமார் நேற்று பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

அது போல த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதி செந்தில் குமார் வெளியிட்ட உத்தரவில், “ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவுகள் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது. இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வக்கீல் பிரிவினரையும் அவர் அழைத்து இருந்தார். மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர். அவர்களுடன் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினார். ஐகோர்ட் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் எந்தெந்த விஷயங்களில் பதில் அளிப்பது என்றும் நீண்ட நேரம் ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ள உத்தரவுகளின்படி செயல்படும் பட்சத்தில் அது த.வெ.க.வுக்கு எதிராக அமைந்து விடும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் நெரிசல் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட வல்லுனர்களுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அது கட்சி வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் உதவியாக இருக்குமா? என்றும் கேட்டறிந்தார்.

இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சுப்ரீம் கோர்டை அணுகுவது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார். ஓரிரு நாளில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விஜய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது. இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டால் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

த.வெ.க தலைவர் விஜய் நாளை மறுநாள் கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் கடந்த 13-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் நாளான 13-ந் தேதி திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். பின்னர் கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

3-வது கட்ட பிரசாரம் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறுவதாக முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் பிரசாரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு அன்றைய தினம் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை மறுநாள்( சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்ய உள்ளார்.

விஜய் பேசுவதற்கு கரூரில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்.ஜி.ஆர். சிலை அருகில், ஈரோடு ரோடு வேலுச்சாமி புரம், 80 அடி சாலை ஆகிய 4 இடங்களை தமிழக வெற்றிக்கழகத்தினர் தேர்வு செய்துள்ளனர். காவல்துறை அனுமதி கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் கரூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.

அந்த வகையில் கரூரில் அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ள 4 இடங்களில் ஏதேனும் ஒரு இடம் பிரசாரத்துக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. அனேகமாக கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்ய இடம் ஒதுக்கப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜய் கரூர் வருகையை முன்னிட்டு அக்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.