ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா, போபண்ணா ஜோடி காலியிறுதிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய ஜோடி 6-4, 7-6 (9) என்ற செட் கணக்கில் உருகுவேயின் ஏரியல் பெஹர் மற்றும் ஜப்பானின் மகோடோ நினோமியா ஜோடியை வீழ்த்தியது.
சானியா மற்றும் போபண்ணா ஜோடி இன்று நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் லாட்வியன் -ஸ்பானிஷ் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ மற்றும் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை எதிர்கொள்கிறது.