Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி – பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புகிறார்

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இங்கிலாந்துக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர்தான் அதிகபட்சமாக 86 ரன் எடுத்தார். ஆனால் அந்த டெஸ்டில் இந்தியா தோற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது, 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் ராகுல் விளையாடவில்லை. தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகினார்.

இந்த நிலையில் மார்ச் 7-ந்தேதி தரம்சாலாவில் தொடங்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார். காயம் முழுமையாக குணம் அடையாததால் இது தொடர்பாக டாக்டர்களின் ஆலோசனையை பெறுவதற்காக அவர் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.பி.எல். மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு முழு உடல் தகுதி பெற்றுவிட வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக உள்ளார். இதன் காரணமாக அவர் இங்கிலாந்து சென்றுள்ளார். ஐ.பி.எல். போட்டி வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 24-ந்தேதி சந்திக்கிறது. இதில் லக்னோ கேப்டனான ராகுல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4-வது டெஸ்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா அணிக்கு திரும்புகிறார். 5-வது டெஸ்டில் அவர் விளையாட இருக்கிறார். அவர் 3 டெஸ்டில் 17 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.