Tamilசெய்திகள்

இந்தியா 200 கோடி தடுப்பூசி இலக்கை அடைய உள்ளது – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை குடிமக்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் வழங்கி வருகிறது. இதற்கிடையே, நாட்டில் இதுவரை 199 கோடியே 87 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று 22 லட்சத்து 93 ஆயிரம் டோஸ்கள் வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளது என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.