ஐ.பி.எல் கிரிக்கெட் – கொல்கத்தாவை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி
ஐ.பி.எல். போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்
அணியும் மோதின. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களம் இறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர் ப்ரித்வி ஷா 29 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் டேவிட் வார்னர் 45 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். கேப்டன்
ரிஷப் பந்து 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அக்சர் படேல் 22 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 29 ரன்களும் அடித்து கடைசி வரை களத்தில் நின்றனர். டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது
இதையடுத்து 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களம் இறங்கி விளையாடியது. துவக்க வீரர் ரகானே 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். வெங்கடேஷ் அய்யர் 18 ரன்னுடன்
வெளியேறினார்.
அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 54 ரன்கள் குவித்தார். நிதிஷ் ராணா 30 ரன்கள் அடித்தார். கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்த 44 ரன்கள்
வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களும், கலீல் அகமது 3 விக்கெட்களும், ஷர்துல் தாக்கல் 2 விக்கெட்களையும் லலித் யாதவ் ஒரு
விக்கெட்டையும் கைப்பற்றினர்.