கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிபரப்பட்ட உக்ரைன் அதிபர் வீடியோ
2022ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான கலைஞர்கள் பங்கேற்றனர்.
கேன்ஸ் திரைப்படத்தின் தொடக்க விழாவில், யாரும் எதிர்பாராத வகையில் ரஷிய போர் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசும் வீடியோ ஒளிபரப்பபட்டது. அதில் பேசிய ஜெலன்ஸ்கி கூறியதாவது:-
‘தினம் நூற்றுக்கணக்கான மக்கள் மடிகின்றனர். இவற்றை பார்த்துகொண்டு சினிமா அமைதியாக இருக்குமா? அல்லது உரக்க பேசுமா?
ஒரு சர்வதிகாரி இருந்தால், சுதந்திரத்திற்கா போர் நடைபெற்றால், அனைத்தும் நமது ஒற்றுமையை பொறுத்தே இருக்கிறது. சினிமா ஒற்றுமைக்கு வெளியில் இருக்குமா?
2வது உலகப்போரில் ஹிட்லர் செய்த கொடூரங்களுக்கு எதிராக சார்லி சாப்ளின் தைரியமாக டிக்டேட்டர் என்ற படத்தை வெளியிட்டார். அது ஹிட்லரின் போரை கிண்டல் செய்து எடுக்கப்பட்டது.
சாப்ளின் உண்மையான சர்வாதிகாரியை அழிக்கவில்லை. ஆனால் சினிமா மெளனம் காக்காமல் சத்தமாக பேசியது.
சினிமா ஊமை இல்லை என்பதை நிரூபிக்க புதிய சார்லி சாப்ளின் தேவைப்படுகிறது. சினிமா இன்னும் மெளனமாகத்தான் இருக்குமா அல்லது அநீதிக்கு எதிராக பேசுமா?
இவ்வாறு அவர் உரையில் பேசினார்.
இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.