Tamilசினிமா

கோலிவுட் நடிகைகள் கலந்துக்கொண்ட ‘CHOSEN4You கான்க்ளேவ்’ நிகழ்வு!

சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு துறையில் ஒரு முக்கிய பங்காற்றி வரக்கூடிய CHOSEN®, தனது 4 வது ஆண்டு நிறைவை CHOSEN®4You கான்க்ளேவ் என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியுடன் பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை சர் முத்தா வெங்கடசுப்பராவ் கச்சேரி அரங்கில் கொண்டாடியது. பாவ்னா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில், பலவிதமான செயல்பாடுகள் மற்றும் சிறப்பு தருணங்கள் இடம்பெற்றது. இது பங்கேற்பாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கியது.

CHOSEN® நிறுவனத்தின் வண்ணங்களை எதிரொலிக்கும் வகையில், கண்ணைக் கவரும் சாம்பல் மற்றும் தங்க நிறத்திலான ஆடைகளை அணிந்து வந்து அந்த நிகழ்ச்சிக்கு இன்னும் சிறப்பு சேர்த்தார்கள் பங்கேற்பாளர்கள். தி சர் முத்தா வெங்கடசுப்பராவ் கச்சேரி அரங்கம் இந்த வண்ணங்களால் நிரம்பி வழிந்ததோடு, CHOSEN® நிறுவனத்தின் அடையாளத்தை மிகச்சரியாக பிரதிபலித்தது.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாவ்னா பாலகிருஷ்ணன் அனைவருக்கும் உற்சாக வரவேற்பு கொடுத்தார். விருந்தினர்கள், மாண்புமிகு நீதிபதி என். கிருபாகரன் மற்றும் மாண்புமிகு நீதிபதி கே.வெங்கடராமன் மற்றும் திரு ஆதித்யா ராம் (ஆதித்யாராம் குழும நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்) ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

டாக்டர் ராஜேஷ் வாசு (இயக்குநர் – அழகியல் அறுவை சிகிச்சை துறை, ஸ்டார் மருத்துவமனை), டாக்டர் வருண் ஆச்சார்யா (மருத்துவ இயக்குநர் மற்றும் ஆச்சார்யா பல் மருத்துவத்தில் முன்னணி ஆலோசகர்), திருமதி ஷைனி சுரேந்திரன் (விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணர், IOC) மற்றும் டாக்டர் ரெனிடா ராஜன் (கியூரேட்டர் CHOSEN®) போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழு விவாதம் இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். ’சிறந்த சமநிலை: தொழில்முறை நடைமுறையில் பல களங்களில் முன்னுரிமைகளை சமநிலைப்படுத்துதல்’ எனும் தலைப்பில் இந்த விவாதம் நடைபெற்றது.

ஒப்பனை, உடற்தகுதி, ஊட்டச்சத்து, பயணம் மற்றும் வாழ்க்கை முறை மற்றும் தொழில்முனைவு போன்ற துறைகளில் சமூக வலைத் தளத்தில் சிறப்பாக ஊக்கம் கொடுக்கும் நபர்களுக்கு விருது வழங்கி அங்கீகரிக்கப்பட்டது. இவர்கள் பொதுமக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேக்கப் மாஸ்டரி விருதை, முன்னணி ஒப்பனை கலைஞரான திருமதி அஸ்மிதா நீலமேகத்திற்கு நடிகை யமுனா சின்னதுரை வழங்கினார். மகப்பேறு மருத்துவத்தில் மூத்த ஆலோசகர் டாக்டர் பிரியா கல்யாணிக்கு மகளிர் ஆரோக்கிய ஊக்குவிப்பாளர் விருதை மாடல் எம்.எஸ். பல்லவி சதானந்த் வழங்கினார். தொழில் முனைவோர் சிறப்பு விருதை திருமதி பியூலா அஜித்துக்கு பல்துறை தொழில்முனைவோரான திரு. ஆதித்யா ராம் வழங்கினார்.

பெண்கள் அதிகாரமளிப்பதில் (The Women Empow-her-ment Award) சிறந்த பங்களிப்பிற்காக @theprojectkintsugi இன் நிறுவனர் திருமதி இந்து கோபால் மற்றும் PVR சினிமாஸின் தென்னிந்திய துணைத் தலைவர் திருமதி மீனா சாப்ரியா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. டிராவல் & லைஃப்ஸ்டைல் எக்ஸ்ப்ளோரர் விருது, ’ஒடிஸி ஆஃப் டூ’ இன் இணை நிறுவனர்களான டாக்டர் கௌதமன் இளம்பாரதி மற்றும் திருமதி ரெபேக்கா ராய் ஆகியோருக்கு திரு வருண் ஆதித்யா (வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மற்றும் சுற்றுச்சூழல் நிபுணர்) அவர்களால் வழங்கப்பட்டது.

திரு சேது ராமன் the Wellness Guru Fitness Award பெற்றார். மேலும் ஊட்டச்சத்து நிபுணர் திருமதி ஷைனி சுரேந்திரனுக்கு Wellness Guru Nutrition Award விருதை டாக்டர் அஷ்வின் விஜய் (எலும்பியல் நிபுணர், ஓஜஸ் ஆர்த்தோ கிளினிக் மற்றும் ஸ்ட்ரென்த் இந்தியா இயக்கத்தின் இயக்குநர்) வழங்கினார். மற்றும் Humanitarian Awards மூலம் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டது. வெற்றியாளர்களில் நம்ம ஊரு ஃபவுண்டேஷன் (NOF), மெகா ஃபவுண்டேஷன்ஸ், ஹோப் ஃபார் கிரிட்டர்ஸ் மற்றும் வித்யாரம்பம் டிரஸ்ட் ஆகியவை அடங்கும். வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும், மனிதநேய விருது(Humanitarian Award) மற்றும் ரூ.40000 நீதிபதி என்.கிருபாகரன் மற்றும்  நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

இந்த விருதுகளைத் தொடர்ந்து, CHOSEN® இரண்டு மேம்பட்ட சன்ஸ்கிரீன் (SAFESCREEN® SEASUN Sunscreen SPF 30+ and SAFESCREEN® NEXGEN SPF 80+ Moisturizing Sunscreen with HEVL protection) அறிமுகத்தை வெளியிட்டது. CHOSEN Angels என குறிப்பிடப்படும் விசுவாசமான வாடிக்கையாளர்களால் தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. CHOSEN Angelsஐ நடிகர் திரு பரத் அவர்கள் கௌரவித்தார்

‘சமூகம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சரியாக பேலன்ஸ் செய்வதுதான் உண்மையான சமநிலை’ என்ற தலைப்பில் பிரபலங்களின் பேச்சு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருமதி நீலிமா ராணி (நடிகை), திருமதி பிரதைனி சுர்வா (மாடல்), திருமதி பிரிதா ஹரி (நடிகர்), திருமதி ரம்யா சுப்ரமணியன் (மீடியா தொழில்முறை மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார பயிற்சியாளர்) மற்றும் திருமதி சம்யுக்தா சண்முகநாதன் (மாடல் & நடிகர்). சமூகம் மற்றும் வாழ்க்கையின் தனிப்பட்ட அம்சங்களை சமநிலைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஈர்க்கும் வகையில் இந்த கலந்துரையாடல் இருந்தது. திருமதி சைத்ரா ரெட்டி (நடிகர்) மற்றும் திருமதி வாணி போஜன் (நடிகை) ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்களை கவுரவித்தனர்.

திரு மெர்வின் ரோஸின் அருமையான ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியுடன்  ஆண்டுவிழா நிறைவு பெற்றது. CHOSEN®4You Conclave வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் அர்ப்பணிப்பு, புதுமை மற்றும் நல்வாழ்வுக்கான முழுமையான அணுகுமுறை ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியது. இந்த நிகழ்வு CHOSEN® இன் பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருந்ததோடு, 4 வருட வெற்றி மற்றும் வாடிக்கையாளர் அன்பையும் கொண்டாடியது.