Tamilசினிமா

‘ஜெயிலர்’ படத்தின் ரன் டைம் பற்றிய தகவல் வெளியானது

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரன்டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் முதல் பாதி ஒரு மணி 19 நிமிடங்களும் இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30 நிமிடங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு யூ/எ சான்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.