Tamilசெய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – மலை மீது ஏற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீபத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாவது:-

திருவண்ணாமலை சுற்றிலும் 13 தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. தற்போது 9 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 19 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. 2,692 சிறப்பு பஸ்கள் 6,431 நடை இயக்கப்படும்.

கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. மேலும் 7 டிரோன்கள் மூலமும், 57 கண்காணிப்பு கோபுரங்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.

மலை மீது ஏறுவதற்கு 2,500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மலை மீது ஏறக்கூடிய 23 வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.