Tamilசினிமா

நடிகர் சூரியின் நில மோசடி வழக்கு – நடிகர் விஷ்ணு விஷாலிடம் விசாரணை

நிலம் வாங்கி தருவதாக நகைச்சுவை நடிகர் சூரியிடம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது.

ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. ரமேஷ்கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ரமேஷ் கொடவாலா ஆகியோருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.

அதை ஏற்று நடிகர் விஷ்ணுவிஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினார்கள். அவரது தந்தை ரமேஷ் கொடவாலாவிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.