Tamilசினிமா

நடிகர் ஜெய்யின் ‘சிவ சிவா’ படத்தின் தலைப்பு ‘வீரபாண்டியபுரம்’ என்று மாற்றப்பட்டது

நடிகர் ஜெய்யின் 30-வது திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. இதற்குமுன் இப்படத்திற்கு ”சிவ சிவா என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்படத்தின் பெயரை மாற்றியுள்ளதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். அதன்படி சிவ சிவா என்ற பெயரை மாற்றி “வீரபாண்டியபுரம்” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டதில் குறிப்பிட்டிருப்பது, இத்திரைப்படம் கிராமம் சார்ந்தது என்பதால், “சிவ சிவா” திரைப்படத்திற்கு மாற்றாக மண் சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால் கூடுதல் பலம் சேர்க்கும் என்று என் நண்பர்களின் ஆலோசனையில் எனக்கும் உடன்பாடு இருந்ததால் படத்தின் பெயரை மாற்றியுள்ளேன்” என்று நீண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.