Tamilசெய்திகள்

புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமாக வடகிழக்கு பருவமழை தொடங்கும். இதற்கிடையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்ந நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.