மாரடைப்பால் மரணமடைந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்த நடிகர் கார்த்தி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகரும் தென் சென்னை கிழக்கு மாவட்ட கார்த்தி ரசிகர் மன்றத்தின் பொருளாளராகவும் பதவி வகித்து வந்த 29 வயதாகும் வினோத் என்பவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இதனையடுத்து சென்னை திருவான்மியூரில் உள்ள மறைந்த வினோத்தின் இல்லத்திற்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வினோத்தின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.