Tamilசெய்திகள்

மும்பையில் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை நகரங்களில் மக்கள் அதிகம் கூடக்கூடிய 3 இடங்களில் குண்டு வெடிக்கும் என தொலைபேசி வழியேயான அழைப்பில் மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மும்பை போலீசார் கூறுகையில், மும்பை பெருநகரில் அந்தேரியில் உள்ள இன்பினிட்டி மால், ஜுகுவில் உள்ள பி.வி.ஆர். மால் மற்றும் விமான நிலைய சகாரா ஓட்டல் ஆகிய 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என போலீசாருக்கு தொலைபேசி வழியே மிரட்டல் தகவல் வந்துள்ளது.

இந்த மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணியில் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டுள்ளன என தெரிவித்தனர். மும்பையில் 2008-ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் இன்னும் ஒரு சில நாட்களில் வரவுள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.