Tamilசினிமா

மூன்று திரைப்படங்களை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். இவர் அடுத்ததாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, அட்லீ தயாரித்த அந்தகாரம் மற்றும் ஆஸ்கருக்கு தேர்வான மலையாள படமான ஜல்லிக்கட்டு ஆகிய 3 படங்களை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ரசித்தவை என குறிப்பிட்டு பதிவிட்டுள்ள ஷங்கர், சூரரைப்போற்று படத்தையும், அதில் ஜிவி பிரகாஷின் இசை ஆத்மார்த்தமாக இருந்ததாக கூறியுள்ளார். மேலும் அந்தகாரத்தில் எட்வின் சாகேவின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்ததாக பாராட்டியுள்ள ஷங்கர், ஜல்லிக்கட்டு படத்தில் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை வித்தியாசமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.