விஜய், அஜித் சந்திப்பு நிஜமா? – வைரலாகும் தகவல்
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்போது டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.
ஓய்வு நேரத்தில் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்றிருக்கிறார் அஜித். இதன் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது. தற்போது பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யசர்லோவை டெல்லியில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்யை அஜித் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய்யும் டெல்லிக்கு சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் விஜய் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அஜித், விஜய் ஒரே சமயத்தில் டெல்லியில் இருப்பதால் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் சந்தித்துக் கொள்ளும் புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.