அசோக் கெலாட் தலைமையிலான அரசு ஊழலில் நம்பர் ஒன் – அமைச்சர் அமித்ஷா தாக்கு

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வருட இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.

நேற்று பா.ஜனதா தலைவர் ஜே.பி. நட்டா மத்திய பிரதேச மற்றும் சத்தீஸ்கர் பேரணியில் பேச, உள்துறை அமைச்சர் அமத் ஷா ராஜஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் பேசினார். அப்போது ஊழலில் அசோக் கெலாட் தலைமையிலான அரசு நம்பர் ஒன் என விமர்சனம் செய்தார்.

மேலும் பேரணியில் அவர் பேசியதாவது:- ஊழலில் அசோக் கெலாட்டின் அரசு நம்பன் ஒன்-ஆக திகழ்கிறது. ஊழலில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் வேலை செய்துள்ளது. இங்கே (பேரணி நடைபெற்ற மெவார் மைதானம்) கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது சட்டசபை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் பா.ஜனதா ஆட்சியமைக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது.

மோடிக்கு உலகளவில் கிடைத்த மரியாதை, அது பா.ஜனதா கட்சிக்கோ அல்லது மற்ற ஒருவருக்கோ கிடைத்த மரியாதை அல்ல. 130 கோடி மக்களுக்கும் கிடைத்த மரியாதை. ராஜஸ்தானில் 43 லட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் என்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

மத்திய பிரதேசம் கார்கோனில் நடைபெற்ற பெரணியில ஜே.பி. நட்டா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத்தை விமர்சனம் செய்து பேசினார் ”லட்லி லட்சுமி யோஜனா (பெண் குழந்தைகள் படிப்பிற்காக சிவராஜ் சவுகான் கொண்டு வந்த திட்டம்) திட்டத்தை கமல்நாத் நிறுத்தினார்.

தற்போது மக்கள் நவம்பர் மாதம் வரும் தேர்தலில் அவரை நிறுத்திவிடுவார்கள் (தேர்தல் தோல்வி)” என்றார். மேலும், ”மத்தியில் மோடி, மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் அரசு. இரண்டு அரசுகளும் சேர்ந்து மக்களுக்கு தேவையானவற்றை உடனடியாக கொண்டு சேர்ப்பார்கள்” என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news