‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் அருண் விஜய்

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தற்போது அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’. இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. எம். ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரித்துள்ள இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ படத்தின் டப்பிங் பணியை நடிகர் அருண் விஜய் நிறைவு செய்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். ஆக்ரோஷமாக சண்டை காட்சிகளுக்கு டப்பிங் செய்யும் அருண் விஜய்யின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools