அஜித் மனைவி மீண்டும் நடிக்க மாட்டார் – இயக்குநர் வெங்கட் பிரபு

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவா் நடிகை ஷாலினி. ‘காதலுக்கு மரியாதை’, ‘அமர்க்களம்’, ‘கண்ணுக்குள் நிலவு’, ‘அலைபாயுதே’, ‘பிரியாத வரம் வேண்டும்’ உள்பட படங்களில்
கதாநாயகியாக நடித்துள்ளார். பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2000-ம் ஆண்டு நடிகர் அஜித்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டு, அதன்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
ஆனாலும் அவர் மீண்டும் நடிக்க வருவதாக அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் டைரக்டர் வெங்கட் பிரபுவிடம், அஜித்குமாரை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. மேலும் ஷாலினி
மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, ‘என் குடும்பத்தில் இன்னொரு ஆளையும் நடிக்க வைக்க பார்க்கிறீர்களா?’ என்று கேட்டு அஜித் என்னை அடிப்பாரே…’ என்று தமாஷாக பதில் அளித்தார்.
மேலும், ‘‘ஷாலினி, குடும்பத்தை கவனிப்பதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார். 2 குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார். இதனால் கண்டிப்பாக ஷாலினி மீண்டும் சினிமாவில் நடிக்க
மாட்டார்’’ என்றும் வெங்கட் பிரபு கூறினார்.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools