அஜித் ரசிகர்களை எச்சரித்த நடிகை கஸ்தூரி!

அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பதிவில், ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனது பெயரை சம்பந்தப்படுத்தியதற்காக நடிகை கஸ்தூரி வார்த்தைப் போரைத் தொடங்கினார். அஜித் ரசிகர் என்று சொல்லி அவரது பெயரை கெடுக்க வேண்டாம் என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த நடிகை கஸ்தூரி, ஆபாச ட்வீட் செய்த அஜித் ரசிகர்களின் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்குகளைக் குறிப்பிட்டு ட்விட்டர் இந்தியா நிறுவனத்திலும் புகாரளித்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர், உண்மையான அஜித் ரசிகர்கள் இப்படி பதிவிட மாட்டார்கள் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வார்த்தை யுத்தம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், ‘அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools