அடுத்த ஆண்டு 1 ஆம் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும் – அமைச்சர் அமித்ஷா பேச்சு

பா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:-

காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ராமஜென்மபூமி வழக்கை நீண்ட காலமாக கோர்ட்டிலேயே வைத்து இழுத்தடித்தன. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தவுடன் பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டினார்.

நான் சொல்வதை ராகுல்காந்தி கேட்டுக் கொள்ளட்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதிக்குள் அயோத்தியில் ராமர் கோவில் தயாராகி விடும். பிரதமர் மோடியின் கைகளில் நாடு பாதுகாப்பாக உள்ளது. 2019-ம் ஆண்டு, காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. 10 நாட்கள் கழித்து, இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து துல்லிய தாக்குதல் நடத்தினர். இவ்வாறு அவர் பேசினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools