அதானி குழுமத்தில் வங்கிகள் முதலீடு, கடன் கொடுத்த விவரங்களை வழங்க வேண்டும் – ரிசர்வ் வங்கி உத்தரவு

ஹிண்டன் பர்க் நிறுவனம் கூறிய முறைகேடு புகாரால் அதானி குழும பங்குகள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. மேலும் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் 15-வது இடத்துக்கு கவுதம் அதானி தள்ளப்பட்டார். அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடிக்கு பங்குகளை விற்க முதலில் திட்டமிட்டு இருந்தது. முதலீட்டாளர்கள் நலன் கருதி இந்த பங்கு விற்பனை ரத்து செய்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ.) உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடு கொடுத்த கடன் விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ. வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools