அதானி குழும விவகாரம் – எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் இன்று போராட்டம்

ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை இரு நாளாக முடக்கின.

இதற்கிடையே, நாடு முழுவதும் பிப்ரவரி 6-ம் தேதி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில், பிரதமர் மோடியின் நண்பர் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார். இதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்த உள்ளது.

மக்களுக்கு பதில்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools