அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் சோதனை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7ம் தேதி நேரில் ஆய்வு நடத்தினர்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்ற சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார்.

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். ஜூலை 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools