அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தி.நகர் சத்யா வீட்டில் லட்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் 16 இடங்களிலும, திருவள்ளூர் மாவட்டத்தில ஒரு இடத்திலும், கோவை மாவட்டத்தில ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சத்யா கடந்த 2016 முதல் 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தார். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த மனுவில், தனக்கு 2.77 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்திருந்தார். அவர் சொத்துகளை மறைத்து மனுதாக்கல் செய்துள்ளதாக, பத்திரிகையாளர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முகாந்திரம் இருந்தால், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news