அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி பாகுபாடுக்கு தடை செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலத்தின் செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், 34 வாக்குகள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒரு வாக்கு எதிராகவும் பதிவானது. இதனால் மசோதா நிறைவேறியது. இதையடுத்து மாநில பிரதிநிதிகள் சபையில் மசோதா அறிமுகம் செய்யப்படும். அங்கு நிறைவேற்றப்பட்டதும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அமெரிக்காவில் இதுபோன்ற சட்ட மசோதாவை நிறைவேற்றும் முதல் மாநிலம் கலிபோர்னியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதாவை அறிமுகம் செய்த செனட்டர் ஆயிஷா வகாப்புக்கு அமெரிக்கவாழ் இந்திய முஸ்லிம்கள் கவுன்சில் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கலிபோர்னியாவில் சாதி பாகுபாட்டுக்கு இடமில்லை என்ற வலுவான செய்தியை இந்த மசோதா வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.

மசோதாவை கலிபோர்னியா சட்டசபை தாமதமின்றி நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேணடும் என்று இந்திய முஸ்லிம் கவுன்சில் நிர்வாக இயக்குனர் ரஷித் அகமது வலியுறுத்தினார். கலிபோர்னியாவை பின்பற்றி அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களும், பாராளுமன்றமும் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools