அமெரிக்க ஓபன் டென்னிஸ் – போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் நடந்தது.

இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் லேமன்ஸ், வித்ரோ ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 7-6 (12-10), 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports