அருண் விஜயின் ‘யானை’ ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ்

அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கி வரும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிராமத்து பின்னணியில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் வருகிற ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் யானை படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதியை அருண் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மே 30ஆம் தேதி மாலை 6 மணிக்கு யானை படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FacebookTwitterWhatsAppCopy LinkShare
AddThis Website Tools