அறிமுக நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க ரெடியான காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:- ‘சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். ஒரு படத்திலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று விடுகிறவர்களும் இருக்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் குறிப்பிட்ட படத்தில் நடித்தால் நமக்கு பெயர் கிடைக்குமா அல்லது கெட்டுப்போகுமா என்ற பயமெல்லாம் இருந்தது.

இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன்.

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்க ஆசைப்படுகிறேன். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்கிறேன். வெப் தொடரிலும் நடிக்க போகிறேன். சினிமாவில் இப்போதுதான் வந்த மாதிரி இருக்கிறது. கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு இன்னும் எனக்கு பிரகாசமான ஆண்டாக இருக்கும்”.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools